பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை அறிவித்த போது இந்தியா முழுவதும் பேடிஎம்-ன் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பெரிய அளவில் பிரபலமானது. இதேபோன்ற தருணம் தற்போது ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்தது மூலம் ஆன்மீக App-களுக்கு உருவாகியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சமீப காலமாக ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்திற்கான டிஜிட்டல் சேவைகள் பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்படத் துவங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமர் கோயில் திறந்தது மூலம் ஆன்மீக App-களின் பயன்பாடு தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள், இத்துறை சேர்ந்த நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு விர்ச்சுவல் முறையில் பூஜை, கோயில் தரிசனம், ஜோதிட சேவைகளை வழங்கும் டெல்லியை சேர்ந்த VAMA நிறுவனத்தின் இணை நிறுவனர் மனு ஜெயின் கூறுகையில் ராமர் கோயில் திறப்பு எங்களுக்கும், எங்களுடைய துறையில் இருக்கும் அனைவருக்கும் பேடிஎம்- பணமதிப்பிழப்பு மொமெண்ட் ஆக மாறியுள்ளது.
ஜனவரி மாதம் மட்டும் வாமா செயலிக்கும், சேவைக்கும் ஆர்கானிக் சர்ச்சில் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார் மனு ஜெயின். வாமா செயலி மட்டும் அல்லாமல் ஆன்மீகம் சார்ந்து, ஜோதிடம் சார்ந்து இருக்கும் செயலிகளுக்கும், சேவைகளுக்கும் டிமாண்ட், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த செயலிகள், டிஜிட்டல் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மீது Peak XV Partners, Elevation Capital, Titan Capital, India Quotient போன்ற முன்னணி நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.
இதேவேளையில் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் BigBasket's BB Now, Zepto, Blinkit, Swiggy Instamart ஆகியவற்றில் எப்போதும் இல்லாத வகையில் விளக்குகள், பூக்கள், அகர்பத்தி, தேங்காய், இனிப்புகள் எனப் பூஜை-க்கு தேவையான, வழிபாடுகளுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
இதேபோல் நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், பல ஈகாமர்ஸ் தளத்தில் அயோத்தி ராமர் கோயில் பொருட்கள், ராமர் கோயில் பிரசாதம் எனப் பலவற்றை விற்பனை செய்து ஏமாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய பொருட்களைத் தடை செய்யவும் நீக்கவும், அமேசானுக்கு Central Consumer Protection Authority (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications