அயோத்தி ராமர் கோயிலால் ரூ.4 லட்சம் கோடி.. திருப்பதி-க்கு தான் இனி பிரச்சனை..!

அயோத்தி ராமர் கோயிலில் முதல் நாள் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்ட போது தடுப்புகளை உடைத்துக்கொண்டு மக்கள் சென்ற காட்சி யாராலும் மற்ற முடியாது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குக் கிடைக்க உள்ள வரி வருமானம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக லாபங்கள் ஆகியவற்றைக் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வர துவங்கியுள்ளது.

இதில் முக்கியமாக எஸ்பிஐ ரிசர்ச் பிரிவில் செய்யப்பட்ட ஆய்வில் அயோத்தி ராமர் கோயில் மற்றும் அயோத்தி சுற்றுலாத் துறையின் வாயிலாக 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் உத்தரப் பிரதேச அரசுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான வரி வருவாய் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலால் ரூ.4 லட்சம் கோடி.. திருப்பதி-க்கு தான் இனி பிரச்சனை..!

இதைவிட முக்கியமாக அயோத்தி ராமர் கோயில் மற்றும் அயோத்தி சுற்றுலா துறையின் மூலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் எஸ்பிஐ ரிசர்ச் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

மேலும் சர்வதேச பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஜெப்ரீஸ் தனது ஆய்வறிக்கையில் பக்தர்கள் வருகை எண்ணிக்கையில் அயோத்தி ராமர் கோயில் வாடிகன் நகரம் மற்றும் மெக்கா ஆகியவற்றைத் தாண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் அயோத்தி ராமர் கோயில் வருடத்திற்கு 5 கோடி பக்தர்களை ஈர்க்கும் எனக் கூறியது மட்டும் அல்லாமல் அயோத்தி உத்தரப் பிரதேசம் மாநிலத்தைத் தாண்டி இந்தியாவின் முக்கியச் சுற்றுலா நகரமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு வருடத்திற்கு 2.5 கோடி பக்தர்களை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் திருப்பதி ஆண்டு வருமானமாக 1200 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் வைஷ்ணவி தேவி கோயில் 80 லட்ச பக்தர்களையும், 500 கோடி வருவாயும் ஈர்த்து வருகிறது. தாஜ் மஹால் 70 லட்ச பார்வையாளர்களையும் 100 கோடி வருவாயையும் ஈர்த்து வருகிறது.

சர்வதேச அளவில் மெக்கா-விற்கு வருடம் 2 கோடி பக்தர்களை ஈர்த்து வரும் வேளையில் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்திற்கு 12 பில்லியன் டாலர் வருவாய்க்கு ஆதாரமாக விளங்குகிறது. இதேபோல் வாடிகன் நகரத்தின் 90 லட்சம் பக்தர்களை ஈர்த்து வருடம் 315 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைக் கொடுக்கிறது.

இதன் மூலம் அயோத்தி ராமர் கோயில் வருவாய் அளவில் மெக்கா, வாடிகன் நகரத்தை முந்த முடியாவிட்டாலும், பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டாயம் ஓரம்கட்டும் எனக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் வாயிலாகவும், இக்கோயிலை சார்ந்தும் வருடம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உருவாக்க உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+