அயோத்தியில் சர்ச்சையில் இருந்த ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கு பின்பு புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராகி வரும் வேளையில் அயோத்தி நகரம் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. அயோத்தி புதிய ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலைத் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டப்படும் என்றவுடனேயே அந்த புனித நகருக்கு மேலும் மவுசு அதிகரித்து விட்டது. அயோத்தியில் உள்ள நிலங்களின் விலை குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகரித்து விட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வேறு நகரங்களைக் காட்டிலும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மக்களிடையே போட்டா போட்டி எழுந்துள்ளது.
அயோத்தி ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றமானது இப்போதைக்குக் குறைய வாய்ப்பு இல்லை. ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கூறுகையில், உள்ளூர் மக்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் நிலத்தில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறுகின்றனர். தாஜ், ரேடிசன் போன்ற ஹோட்டல் செயின் நிறுவனங்களும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மும்முரமாக உள்ளன.
ராமர் கோயில் அமைந்துள்ள பகுதி மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் விலை அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பைசாபாத் ரோடு பகுதியில் விலை சதுர அடிக்கு ரூ.400 முதல் ரூ.700 வரை இருந்த நிலத்தின் 2023 அக்டோபரில் ரூ.1500 முதல் ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அயோத்தி நகரில் 2019 ஆம் ஆண்டில் விலை சதுர அடிக்கு ரூ.1000 முதல் ரூ.2000 இருந்த நிலத்தின் விலை இப்போது ரூ.4000 முதல் ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது. அயோத்தியில் ஜனவரி மாதத்தில் அபிநந்தன் லோதா ஹவுஸ் 25 ஏக்கர் பரப்பில் குடியிருப்பு கட்டுமானத்தை தொடங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், அயோத்தியை உலகளவில் முக்கிய இடமாக ஆக்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராமர் கோயில் கட்டப்பட்டதிலிருந்து அயோத்தியில் ரியல் எஸ்டேட் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. அயோத்தியின் புனிதத் தன்மையினால் முதலீட்டாளர்கள் இங்கு நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கருதுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications