உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறப்புவிழா நெருங்கிக் கொண்டிருப்பதால் அங்கு தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அயோத்தியில் ரியல் எஸ்டேட் சொத்துகள் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு இருந்த விலையைக் காட்டிலும் அயோத்தியில் உள்ள நிலங்களின் மதிப்பு 10 மடங்குக்கும் மேல் அதிகரித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ, வாரணாசி, நொய்டா, குஷி நகரைத் தொடர்ந்து ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகிறது.

புதிய கோயில் திறப்புவிழாவுக்கு முன்பாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டு விடும் 336.59 ஏக்கர் பரப்பில் ரூ.250 கோடி செலவில் அமையும் விமான நிலையத்தில் ஏர்போர்ட் டெர்மினல் மட்டும் 8000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படுகிறது.
இதனிடையே நிறைய குடியிருப்புகள், தனியார் ஹோட்டல்களும் அங்கு அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அதற்கான அனுமதியை மாநில அரசு வழங்கிவிட்டது. அயோத்தியில் உள்ள சௌடா கோசி பரிக்ரமா, ரிங் ரோடு, லக்நௌ- கோரக்பூர் ஹைவே ஆகிய பகுதிகளில் பெரும்பாலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த மாத இறுதிக்குள் புதிய குடியிருப்பு திட்டத்தை தொடங்குவதற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் 80 ஏக்கர் பரப்பில் அமைகிறது. லக்னோ- கோரக்பூர் ஹைவே அருகே அமையும் இத்திட்டத்துக்கான நிலம் 95 சதவீதம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது என்று ஆணையத்தின் செயலர் சத்யேந்திர சிங் கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலின் கட்டுமானம் 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. அயோத்தியில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 30,000க்கும் மேற்பட்ட நிலப்பதிவு நடைபெற்றுள்ளது.
ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட பயணத்தில் 25 ஏக்கர் பரப்பில் மும்பையைச் சேர்ந்த ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா ரியல் எஸ்டேட் நிறுவனம் குடியிருப்பு வளாகத்தை அமைக்கிறது.
கோயிலைச் சுற்றியுள்ள 5-10 கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக ஸ்ரீ பாலாஜி அயோத்தியா புராப்பர்டி புரோக்கர் பரசுராம் மிஸ்ரா கூறியுள்ளார்.
இங்கு சதுர அடி ரூ.2000 முதல் ரூ.18,000 வரை விற்கப்படுவதாகக் கூறினார்.
2019இல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதிலிருந்து நிலத்தின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications