உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஜென்ம பூமியில் புதிய ராமர் கோயிலைக் கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து அயோத்தியில் நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துவிட்டது.
நூற்றுக்கணக்கான பிளாட்கள் கொண்ட அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்கள், ஸ்டார் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் என கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் மெகா நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அயோத்தியில் வந்து முதலீடுகளைக் குவிக்கின்றன.

இந்த நிலையில், ஹோட்டல் துறையில் 121 ஆண்டு பழமையான தாஜ் ஹோட்டல் குரூப் தனது நான்காவது சொத்தை அயோத்தியில் வாங்குகிறது. தாஜ் நிர்வாக இயக்குநரும் சிஇஓவுமான புனீத் சத்வால் இது பற்றி கூறுகையில் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நான் புனித நகரான அயோத்திக்குச் செல்கிறேன்.
அங்கு எங்களது நான்காவது சொத்தை இறுதி செய்கிறேன், ஏற்கனவே ஜிஞ்சர், விவன்தா, செலிக்யூஷன்ஸ் போன்ற பிரபல ஹோட்டல் திறக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் 3வதாக வாங்கப்போகும் சொத்து தாஜ் ஹோட்டலுக்காக இருக்கும் என தெரிவித்தார்.
அயோத்தியில் இன்னும் 3-4 ஆண்டுகளில் 50 முதல் 100 ஹோட்டல்கள் இருக்கும். இந்த நகரம் உலகின் மத ஸ்தலமாக நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் தேவையான வளர்ச்சியைக் காணும் என்று சத்வால் கூறினார். வாரணாசியில் தற்போதுள்ள ஹோட்டல்களில் அறைகளைச் சேர்த்து, புதியவற்றைத் திறக்கத் தாஜ் திட்டமிட்டுள்ளது.
ரேடிசன் ஹோட்டல் குழுமத்தின் தலைவரும், முதன்மை ஆலோசகருமான (தெற்காசியா) கே பி கச்ரு கூறுகையில், ஐந்து நட்சத்திரங்கள் முதல் நடுத்தர அளவிலான புனித நகரத்துக்காக 12 ஹோட்டல்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குழு, பிரதமர் மோடியால் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பு, ஜனவரி 10-ம் தேதி அயோத்தியில் ராடிசன் நிறுவனத்தால் பார்க் இன் ஹோட்டல் திறக்கப்பட்டது.
தாஜ்-ன் தாய் நிறுவனமான இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (IHCL) இதுவரை அயோத்தியில் ஒரு உயர்தர விவாண்டா, லீன் லக்ஸ், ஜிஞ்சர், செலக்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் தாஜ் பிராண்ட் மட்டும் இதுவரை இல்லை. இப்போது அதுவும் விரைவில் வருகிறது.
ஓபராய் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான விக்ரம் ஓபராய், டிரைடென்ட் ஆரம்பத்தில் வெளிநாட்டு மற்றும் குழு பயணிகளுக்கானதாக செயல்பட்டு வந்தது. இப்போது அதன் முதன்மையான கவனம் இந்திய பயணிகள் மீது உள்ளது. பெரிய அறைகளுடனான ஹோட்டல்களை கட்டுவதற்கான ஒரு மாற்றத்துக்கு டிரைடென்ட் உட்படும் என்றார்.
EaseMyTrip என்ற பயண இணையதளமானது, அயோத்தியில் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் நுழைகிறது.
இந்த லட்சியத் திட்டத்தை முன்னின்று நடத்தும் ஜீவானி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.100 கோடி வரையிலான குறிப்பிடத்தக்க முதலீட்டு மைல்கல்லைக் குறிக்கிறது என்று ஈஸ்மைடிரிப் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications