அயோத்தியில் இப்போதைக்கு இதுதான் செம 'HOT' பிஸ்னஸ்.. ராமர் கோயில் திறப்பின் எதிரொலி..!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதான் பிரதிஷ்டை பெயரில் துவங்க உள்ள வேளையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த நிகழ்வை டிவி, இண்டர்நெட் வாயிலாகப் பார்த்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் அயோத்திக்கு சென்றுள்ளது.

வரலாற்று விழாவாகப் பார்க்கப்படும் இதைப் பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருக்கும் காரணத்தால் டெல்லியில் இருந்து அயோத்தி புறப்பட்டு வந்துள்ளார். இவருடன் பல்வேறு துறை அமைச்சர்கள், அம்பானி முதல் பல தொழிலதிபர்கள், ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதால் ஒட்டுமொத்த நகரமும் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது.

அயோத்தியில் இப்போதைக்கு இதுதான் செம 'HOT' பிஸ்னஸ்.. ராமர் கோயில் திறப்பின் எதிரொலி..!!

இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் அயோத்தி நகரம் வரலாறு காணாத வகையில் மக்களை ஈர்க்க துவங்கியிருக்கும் வேளையில், இந்நகரின் வர்த்தகம், பொருளாதாரம் வேமாக வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது. இந்த நிலையில் அயோத்தியில் தற்போது முக்கியமான வர்த்தகமாக மாறியிருக்கும் தொழில் இரண்டு.

பொதுவாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அவர்களுக்கான அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் கடைகள் தான் அதிகப்படியான வர்த்தகத்தை எதிர்கொள்ளும். அந்த வகையில் தற்போது அயோத்தியில் மளிகைக் கடைகளும், ஹோட்டல்களுக்கும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறும் நம்பிக்கையில் உள்ளது.

அயோத்தியில் இருக்கும் மளிகை கடைகள் கடந்த வருட ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் சுமார் 32 சதவீதம் அதிகப் பொருட்களை வாங்கி வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இன்றைய கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மக்கள் அதிகமாக வரும் காரணத்தால் அதிகப்படியான வர்த்தகம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் அதிகப்படியான ஸ்டாக்-களை வாங்கிக் குவித்துள்ளனர்.

இந்தியாவில் எந்த நகரத்தில் இல்லாத வகையில் அயோத்தியில் இருக்கும் மளிகைக் கடைகள் FMCG நிறுவனங்களிடம் அதிகப்படியான ஆர்டர்களை வைத்துள்ளது. இதில் முக்கியமாகக் குளிர்பானங்கள், கோடைக்காலத்தில் தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றின் இருப்பு 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

மேலும் சாக்லேட், பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிராண்டென் உணவு பொருட்களின் இருப்பு 23-52 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதைத் தாண்டி பூஜை சாமான் கடைகளும்,பூஜை சாமான்களின் இருப்பும் அதிகரித்துள்ளது. அகர்பத்தி இருப்பு மட்டும் 77 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் நம்கீன் எனப்படும் இந்திய தின்பண்டங்கள் இருப்பு 42.7 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

இதேபோல் அயோத்தியில் சிறிதும், பெரிதுமாக அதிகப்படியான ஹோட்டல்கள் திறக்கப்பட்டு உள்ளது, ஒவ்வொரு நாளும் வெளியூரில் இருந்து வரும் பல லட்சம் மக்களுக்குப் போதுமான சேவை அளிக்கும் பொருட்டு ஹோட்டல்கள் துவங்கப்பட்டு வருகிறது.

மேலும் மளிகை கடைகள் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை டார்கெட் செய்து நாட்டில் இருக்கும் அனைத்து FMCG நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனால் அயோத்தி நுகர்வோர் சந்தை மொத்தமும் சூடுபிடித்துள்ளது மட்டும் அல்லாமல் மளிகை கடைகள் மற்றும் ஹோட்டல் முக்கிய வர்த்தகமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+