சென்னை: அயோத்தி நகரம் தற்போது பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு, சிறிய நகரமாக இருந்த அயோத்தி தொடர்ந்து வளர்ந்து வரும் இடமாக மாறி உள்ளது. மாஸ்டர் பிளான் 2031-இன் ஒரு பகுதியாக, இந்திய அரசு ரூ. 83,000 கோடி பட்ஜெட்டை பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இப்போது வரை ரூ. 30,500 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
அயோத்தி விமான நிலையம்: அயோத்தியில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது சுமார் ரூ. 1450 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் மக்கள் வரத்தை சமாளிக்கக் கூடிய வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக முடிவடைந்த பின், இந்த வால்மீகி விமான நிலையம் வருடத்திற்கு 6 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அயோத்தியில் ரூ. 450 கோடி ரயில் நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை பராமரிக்க ரூ. 10,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது .

எலக்ட்ரிசிட்டி மற்றும் சோலார் பவர் அமைக்கும் வேலைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. அயோத்தியில் தற்போது 3300 ஹோட்டல் அறைகள் உள்ளன. மேலும் 76 புதிய ஹோட்டல்களும் உள்ளன. TAJ ஹோட்டல் மொத்தம் 400 அறைகள் கொண்ட 3 புதிய ஹோட்டல்களையும் நிறுவ உள்ளது எனக் கூறப்படுகிறது. OYO சுமார் 50 ஹோட்டல்களில் 1000 அறைகளை உருவாக்க இருக்கிறது.
நிலத் தேவை: அயோத்தியில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக சொத்து விலைகள் உயர்ந்து வருகின்றன. அயோத்தியில் 70 ஏக்கர் பரப்பில் "Vasisthkunj" என்ற ஒருங்கிணைந்த குடியிருப்பு திட்டத்தை ரூ. 2200 கோடி முதலீட்டுடன் உருவாக்கி வருகிறது.
தனியார் நிறுவனங்களில், The House of Abhinandan Lodha, "Sarayu" என்ற பெரிய அளவிலான திட்டத்தை 51 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவித்துள்ளது. Axon Developers செய்த ஆராய்ச்சியின் படி, முக்கிய மையப் பகுதிகளில், அதாவது கோயிலின் 3 கிமீ சுற்றுவட்டத்தில், 2029 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி ரூ. 12,600-க்கு மேல் எட்டும் என்று கூறியுள்ளது.
முக்கிய ஆராய்ச்சி முடிவுகள்: அயோத்தியில் ராமர் கோயிலின் 3 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில், தற்போதைய நிலத்தின் விலை சதுர அடிக்கு ரூ. 6,050 ஆக உள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ. 12,651 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோயிலின் 3 முதல் 8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில், தற்போதைய சொத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ. 3950 ஆக உள்ளது. இது 2029ஆம் ஆண்டில் ரூ. 7773 வரை உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
அயோத்திக்கு வெளியில் உள்ள பகுதிகளில் அதாவது கிராமப்புற எல்லைகள் மற்றும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள தற்போதைய சொத்து விலை 1 சதுர அடிக்கு ரூ. 460 ரூபாயாக இருக்கிறது. இது 2029ஆம் ஆண்டில் ரூ. 720 ஆக மாறக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த பகுதி உங்களுக்கு ஏதேனும் சொந்த வீடு இருந்து இரண்டாவதாக நீங்கள் வீடு வாங்க இருக்கிறீர்கள்.. எனும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications