ஹெல்த் ஐடி என்றால் என்ன..? எப்படி இயங்குகிறது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ முறையை மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கவும், அரசின் சலுகை மற்றும் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 

இப்புதிய திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதியே பிரதமர் அறிவித்திருந்தாலும், இத்திட்டம் சோதனை திட்டமாக வெறும் 6 யூனியன் பிரதேசத்தில் மட்டுமே இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார் .

இத்திட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனடியாகப் பெற வேண்டியது ஹெல்த் ஐடி. இந்த ஹெல்த் ஐடி மூலம் என்ன பலன்.. இது எப்படி இயங்குகிறது.. என்பதைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

மோடி அறிமுகம் செய்த புதிய திட்டம் 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' - முழு விபரம்

14 இலக்கம் கொண்ட ஹெல்த் ஐடி

14 இலக்கம் கொண்ட ஹெல்த் ஐடி

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் முதல் முக்கிய அடிப்படையே நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 14 இலக்கம் கொண்ட ஹெல்த் ஐடி உருவாக்குவது தான். இந்த ஹெல்த் ஐடி கொண்ட டிஜிட்டல் கணக்கில் தான் ஒருவரின் அனைத்து மருத்துவத் தரவுகளும் பதிவு செய்யப்படும்.

ஆதார் எண் - ஹெல்த் ஐடி

ஆதார் எண் - ஹெல்த் ஐடி

ஆதார் எண் அடிப்படை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்படும் தனிப்பட்ட எண் தான் இந்த ஹெல்த் ஐடி. இந்த 14 இலக்கம் கொண்ட ஹெல்த் ஐடி உடன் ஆதார் இணைக்கப்படுவது மட்டும் அல்லாமல் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணும் இணைக்கப்பட உள்ளது. இந்த ஹெல்த் ஐடியை வைத்து தான் மருத்துவ நிறுவனங்கள் ஒருவரின் ஹெல்த் ரெக்கார்டுகளைப் பெற முடியும்.

டிஜிட்டல் ஹெல்த் இன்பரா
 

டிஜிட்டல் ஹெல்த் இன்பரா

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை உருவாக்கி வரும் NDHM அமைப்புக் கூறுகையில், இத்திட்டம் மக்களின் அனைத்து விதமான மருத்துவச் சேவைகளுக்கும் ஓன் ஸ்டாப் சொல்யூஷன் ஆக விளங்கும். மேலும் நாட்டின் டிஜிட்டல் ஹெல்த் இன்பரா திட்டத்திற்கு இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் முதுகெலும்பாக விளங்கும் எனத் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்

எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்

இந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட் உருவாக்கப்படும். இந்த ரெக்கார்ட் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் தரவுகளைச் சரி பார்த்து புதிய தரவுகள் சேர்ப்பது மட்டும் அல்லாமல் பழைய தரவுகளையும் சரி பார்க்க முடியும். இதன் மூலம் மக்களுக்குச் சரியான மருத்துவச் சிகிச்சையை அளிக்க முடியும்.

6 யூனியன் பிரதேசத்தில்

6 யூனியன் பிரதேசத்தில்

இத்திட்டம் இந்தியாவில் அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தாமன் மற்றும் டியு, லடாக், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 6 யூனியன் பிரதேசத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் இந்தியா முழுக்கச் செயல்பட உள்ளதாக இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம்

பிரதமர் இன்று நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் 4 பிரிவுகள் உள்ளது

1. டிஜிட்டல் ஹெல்த் ஐடி

2. ஹெல்த் ப்ரொபஷனல் ரிஜிஸ்ட்ரி

3. ஹெல்த் பெசிலிட்டி ரிஜிஸ்ட்ரி

4. எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்ட்ஸ்

டிஜிட்டல் தளம்

டிஜிட்டல் தளம்

முதல்கட்டமாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் மூலம் இந்தியாவில் ஹெல்த்கேர் பிரிவில் இந்த 4 பிரிவுகள் மூலம் டிஜிட்டல் தளத்தை உருவாக்க வேண்டும். அதன் பின்பு அரசின் முக்கியமான திட்டங்களான டெலிமெடிசின் மற்றும் ஈ-பார்மசி ஆகிய சேவைகளை இத்திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

டிஜிட்டல் ஹெல்த் ஐடி

டிஜிட்டல் ஹெல்த் ஐடி

இத்திட்டத்தில் மிகவும் முக்கியமானது டிஜிட்டல் ஹெல்த் ஐடி தான், ஆதார் எண் போல் ஒருவருக்கு ஒரு ஐடி என்பது போல் மிகவும் நிலையான கட்டமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி மூலம் உரிய நபருக்கு தான் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதா என்பது முதல் எந்த மருத்துவமனை, எந்த மருத்துவர், என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்பது வரையில் நோயாளியின் எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்-ல் பதிவு செய்யப்படும்.

 ஹெல்த் ஐடி முதன்மை

ஹெல்த் ஐடி முதன்மை

அடுத்தச் சில மாதத்தில் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி முதன்மையாகக் கொண்டு தான் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலை வரலாம். இந்தியாவில் வேகமாக வளரும் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஹெல்த்கேர் துறையில் சென்டரலைஸ்டு டிஜிட்டல் சேவைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இத்திட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ayushman Bharat Digital Mission: What is Unique Health Id? How Health ID works?

Ayushman Bharat Digital Mission: What is Unique Health Id? How Health ID works?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X