ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார திட்டமாகும். 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தனி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் விண்ணப்பித்து ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தையொட்டி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதார காப்பீடு வழங்கி உள்ளார்.

ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு என்றால் என்ன?: 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த குடிமக்களும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற இந்த கார்டு உதவும். மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு வழங்கப்படும். வீட்டில் ஒரு முதியவருக்கு ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு இருந்தால், அவர்களுடைய மருத்துவச் செலவு குறையும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையை பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற குறிப்பிட்ட சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனையைப் பார்வையிடலாம். முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயிஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் விரிவாக்கம் குறித்து தனது திருப்தியை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஒவ்வொரு முதியவரும் இதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவர்க்கும் ஆயுஷ்மான் வய வந்தனா யோஜனா மூலம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் உயர் வகுப்பினர் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.
ஏற்கனவே AB PM-JAY-இன் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான கூடுதல் டாப்-அப் காப்பீடு பெறுவார்கள்.
ஆயுஷ்மான் பாரத் யாருக்கு பயனளிக்கும்?: இந்தத் திட்டம் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் இலவச சுகாதார காப்பீடு கவரேஜ் வழங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications