மும்பை: பிரபல பாலிவுட் ஸ்டார் ஆயுஷ்மான் குரானா புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தி மேன் கம்பெனி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து 400 சதவீதம் வரை லாபம் கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தி மேன் கம்பெனி என்பது ஆண்களுக்கான ஒரு பிரீமியம் பிராண்ட் ஆகும். ஆண்களுக்கான பாடி ஸ்பிரே, அழகுசாதன பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. இமானி லிமிடெட் நிறுவனம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி மேன் கம்பெனியை வாங்கி உள்ளது.

இதன் மூலம் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு தன்னுடைய முதலீட்டில் சுமார் 400 சதவீத லாபம் கிடைத்துள்ளதாம். ஆயுஷ்மான் குரானாவை பொறுத்தவரை நடிப்பு மட்டுமல்லாது புதிய தொழில்களில் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்துபவர்.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் அவர் தி மேன் கம்பெனி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். குறிப்பாக இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் முறையிலான அழகுசாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கின்ற நிலையில் தான் தி மேன் கம்பெனி உருவானது.
இந்த நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியடைந்தது. இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆயுஷ்மான் குரானா கணிசமான தொகையை முதலீடு செய்திருந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது மட்டுமில்லாமல் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் அவர் செயல்பட்டார்.
அவரது விளம்பரங்கள் மேன் கம்பெனி நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் மேன் கம்பெனி நிறுவனத்தின் நோக்கம் ஆரம்பத்திலேயே தனக்கு தெளிவாக புரிந்து விட்டது என்றும் நிச்சயமாக இந்த நிறுவனம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்துதான் அதில் இணைந்ததாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார். ஒரு முதலீட்டாளராக மட்டுமின்றி இதன் விளம்பர தூதராகவும் செயல்பட்டதில் தனக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே மேன் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனரான ஹித்தேஷ் தினரா, ஆயுஷ்மான் குரானா தங்களுடைய நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த பிறகு தங்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை கிடைத்ததாகவும் தங்களுடைய நிறுவன பொருட்களை நவீன இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததில் ஆயுஷ்மான் குரானா முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தி மேன் கம்பெனி நிறுவனத்தின் வளர்ச்சியையும் இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் பொருட்களுக்கான தேவை இருப்பதையும் உணர்ந்துள்ள இமாமி லிமிடெட் நிறுவனம் தி மேன் கம்பெனி நிறுவனத்தை வாங்கியுள்ளது.
கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 185 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் இகாமர்ஸ் தளங்கள் மூலமே கிடைத்ததாக தெரிகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications