UAE-யில் கொடி கட்டிப் பறக்கும் கேரள பணக்காரர்.. யார் இந்த ஆசாத் மூப்பன்..!

டாக்டர் ஆசாத் மூப்பன் துபாயில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கிளினிக் தொடங்கியது முதல், இன்று ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முன்னேறியுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் பொதுவாகவே இந்திய மக்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும், அதிலும் முக்கியமாக கேரள மக்கள் எண்ணிக்கை பிற மாநிலத்தவர்களை காட்டிலும் மிகவும் அதிகம்.

ஐக்கிய அரபு நாடுகளில் கேரளா-வை சேர்ந்த பல பில்லியனர்கள் இருக்கும் வேளையில் ஆசாத் மூப்பன் மிகவும் முக்கியமானவர்.

யார் இந்த ஆசாத் மூப்பன்!

யார் இந்த ஆசாத் மூப்பன்!

ஆசாத் மூப்பன் 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை உன்னி மூப்பன் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக ஆர்வலராகவும் இருந்துள்ளார்.

ஆசாத மூப்பன் நசீரா ஆசாத்தை மணந்தார். அவருக்கு அலிஷா மூப்பன், ஜிஹாம் மூப்பன் மற்றும் ஜெபா மூப்பன் என மூன்று மகள்கள் உள்ளனர்.

MBBS இல் தங்கப் பதக்கம்!

MBBS இல் தங்கப் பதக்கம்!

ஆசாத் மூப்பன் MBBS பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் கேரளாவில் உள்ள கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டதாரி படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் மார்பு நோய்களுக்கான டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

துபாய் பயணம்!

துபாய் பயணம்!

மூப்பன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 1982 இல், மருத்துவ விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் அவர் 1987 இல் துபாய்க்கு கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரில் மசூதி கட்டுவதற்கு பணம் திரட்டவும், அங்கு சென்று மருத்துவ பணியைத் தொடங்கவும் முடிவு செய்தார்.

சின்ன கிளினிக்!

சின்ன கிளினிக்!

அதனைத் தொடர்ந்து துபாயில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தத் துவங்கினார். அதன்பின் அவர் படிப்படியாக வளர்ந்து , இன்று ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முன்னேறியுள்ளார். இவர் ஆஸ்டர் டிஎம் (Aster DM Healthcare) நிறுவனத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Aster DM Healthcare நிறுவனம்!

Aster DM Healthcare நிறுவனம்!

 

இந்நிறுவனம் GCC மற்றும் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதோடு, Aster DM ஹெல்த்கேர் இப்போது சுமார் 3,100 மருத்துவர்களை உள்ளடக்கிய 20,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வரும் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமாக உள்ளது.

மேலும் இந்நிறுவனம் 25 மருத்துவமனைகள், 117 கிளினிக்குகள் மற்றும் 238 மருந்தகங்கள் உட்பட 380 கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்!

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்!

ஃபோர்ப்ஸின் வெளியிடுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பணக்கார இந்தியர்களின் பட்டியலில், டாக்டர் ஆசாத் மூப்பனின் நிகர மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அந்நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+