இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறையில் ஈகாமர்ஸ், ஆன்லைன் பார்மா, ஆன்லைன் மளிகை பொருட்கள் வரிசையில் ரெடி டூ குக் பிரிவு பொருட்களின் வர்த்தகமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ரெடி டூ குக் பிரிவில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக வளர்ந்து இருக்கும் iD Fresh Food நிறுவனத்தில் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அசிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார்.
டாடா குழுமத்தின் ரத்தன் டாடா-வை போலவே அசிம் பிரேம்ஜி தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாகப் பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார்.
iD Fresh Food நிறுவனம்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் iD Fresh Food நிறுவனத்தின் வர்த்தகத்தை இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகப் புதிய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
507 கோடி ரூபாய் முதலீடு
சமீபத்தில் iD Fresh Food நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான ஹெலியன் வென்ச்சர்ஸ் நிறுவனம் 10 மடங்கு லாபத்தில் தனது முதலீட்டு பங்குகளை விற்பனை செய்தது. இந்த வாய்பை பயன்படுத்தி ஆசியாவின் முன்னணி தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான நியூகுவெஸ்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் மற்றும் அசிம் பிரேம்ஜி-யின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான ப்ரேம்ஜிஇன்லெஸ்ட் நிறுவனமும் இணைந்து சுமார் 507 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
அசிம் பிரேம்ஜி - ப்ரேம்ஜிஇன்லெஸ்ட்
அசிம் பிரேம்ஜி-யின் ப்ரேம்ஜிஇன்லெஸ்ட் நிறுவனம் iD Fresh Food நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் இந்தப் புதிய முதலீட்டு சுற்றிலும் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டுச் சுற்றில் iD Fresh Food நிறுவனம் 1800 முதல் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டு உடன் ஹெலியன் வென்ச்சர்ஸ் விற்பனை செய்த 17 சதவீத பங்குகள் உடன் ப்ரைமரி கேபிடல் பிரிவில் இருந்து 5-6 சதவீத பங்குகளையும் விற்பனை செய்து 507 கோடி ரூபாய் முதலீட்டை iD Fresh Food நிறுவனம் திரட்டியுள்ளது.
பிசி முஸ்தபா
2005ல் பிசி முஸ்தபா, அப்துல் நாசர் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து உருவாக்கிய குட்டி நிறுவனமான iD, இன்று வருடம் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமான உருவெடுத்துள்ளது. சமீபத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூர் ஆனேகல் பகுதியில் புதிய தோசை-இட்லி மாவு தொழிற்சாலை-யை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இட்லி- தோசை மாவு ஆரம்பம்
இட்லி- தோசை மாவு உடன் துவங்கி iD நிறுவனம் இன்று மலபார் பரோட்டா, கோதுமை பரோட்டா, பன்னீர், தயிர், 'ஸ்க்யூஸ் அண்ட் ஃப்ரை' வடை மாவு, பில்டர் காபி டிக்காஷன், சாண்ட்விச் வெள்ளை ப்ரெட் மற்றும் கோதுமை ப்ரெட் ஆகியவற்றைச் சொந்தமாகத் தயாரித்து இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்காவில் சுமார் 30,000 ரீடைல் கடைகளில் விற்பனை செய்து வருகிறது.
பிக் பேஸ்கட்
iD நிறுவனத்தின் ஈகாமர்ஸ் விற்பனை தற்போது 300 சதவீத வரையில் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் பிக் பேஸ்கட் உடன் இணைந்து iD Fresho என்ற புதிய பிராண்டை உருவாக்கி விற்பனையில் இறங்கியுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா
iD நிறுவன ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகளில் 45 நகரங்களில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் நிலையில் இப்புதிய முதலீட்டின் மூலம் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் விரைவில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற நாட்டுச் சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ரெடி டூ குக் பிரிவு
மேலும் இந்தியாவில் ரெடி டூ குக் பிரிவு வர்த்தகம் 2019ல் 2,100 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2024ல் 4,800 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இப்பிரிவு வர்த்தகம் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
வளர்ச்சியும், போட்டியும்
இதனால் iD நிறுவனத்திற்கான வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளது, இதேவேளையில் மில்கி மிஸ்ட் உட்படப் பல நிறுவனங்கள் இப்பிரிவு வர்த்தகத்தில் இறங்கியுள்ளதால் போட்டியும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications