இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Wipro-வின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி, அவரின் குடும்ப அலுவலகமான ப்ரேம்ஜி இன்வெஸ்ட், பேங்க் ஆப் பரோடா-வின் துணை நிறுவனமான நைனிடால் வங்கியில் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசிம் பிரேம்ஜி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக முதலீடு செய்ய துவங்கியுள்ளார், ஒருப்பக்கம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்களை கண்டு இப்பிரிவு நிறுவனங்களை கைப்பற்றியும், முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது வங்கி சேவை பக்கம் திரும்பியுள்ளது அசிம் பிரேம்ஜி கவனம்.

பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் அடிப்படை ஆய்வு செய்த பின்னர், நைனிடால் வங்கி பங்குகளை வாங்குவதற்கான ஒரு நிபந்தனை உடன்படிக்கை கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தக்கட்ட ஆய்வில் இரு தரப்புக்கும் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் நிறுவன பங்குகளை வாங்கும் நடைமுறை துவங்கும்.
உத்தரகண்ட் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நைனிடால் வங்கியின் இந்த ஒப்பந்தத்தில் ரூ.800 கோடி என மதிப்பிட கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ப்ரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் டிவிஎஸ் கிரெடிட் என்ற NBFC நிறுவனத்தை ஏற்கனவே வைத்திருக்கும் நிலையில், அசிம் பிரேம்ஜி குடும்பத்தின் இந்த முதலீட்டு நிறுவனத்திற்கு இதுவே முதல் வங்கி துறை முதலீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆப் பரோடா, நைனிடால் வங்கியில் தனது 98 சதவீத பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்ய கடந்த சில வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. முதல் கட்டமாக சுமார் 51 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அசிம் பிரேம்ஜி குடும்பம் வங்கி துறையில் முதலீடு செய்வது இதுவே முதல் முதலீடு ஆகும். இந்த ஒப்பந்தம் நைனிடால் வங்கியின் மறுசீரமைப்பிற்கான முதல் படியாக இருக்கலாம்.
நைனிடால் வங்கி 1922 ஆம் ஆண்டில், உள்ளூர் மக்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு நிறுவப்பட்டது. 1973 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, நைனிடால் வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட Bank of Baroda அறிவுறுத்தியது.
தற்போது, இந்த வங்கி, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் 168 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. நைனிடால் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு RTGS, NEFT, RuPay ஏடிஎம் டெபிட் கார்டு, இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற சேவைகளை வழங்குகிறது.
அசிம் பிரேம்ஜி, ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில், குஜராத் சர்வதேச நிதி நகரம் (GIFT City) -ல் முதலீட்டு அமைப்பை ஒன்றை நிறுவுவதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அவரது குடும்ப நிறுவனமான ப்ரேம்ஜி இன்வெஸ்ட் பெற்றது.
நைனிடால் வங்கியைக் கைப்பற்றுவது ப்ரேம்ஜி இன்வெஸ்ட்டுக்கு வங்கித் துறையில் அறிமுகமாகும் ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும். அதே நேரத்தில், பாரத ஸ்டேட் வங்கிக்கு, தனது மைய வங்கிச் சேவைகளில் கவனம் செலுத்த வழிவகுக்கும். மேலும், இது நைனிடால் வங்கியின் மறுசீரமைப்பிற்கான முதல் படியாகவும் இருக்கலாம்.
ப்ரேம்ஜி இன்வெஸ்ட் ஃபின்டெக் துறையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதால், நைனிடால் வங்கியின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலில் முக்கிய பங்கு வகிக்கலாம். புதிய கிளைகளைத் திறப்பது அல்லது பிற வங்கிகளுடன் இணைவதன் மூலம் நைனிடால் வங்கியின் நெட்வொர்க் விரிவடையக்கூடும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications