இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வில் சமீபத்தில் அதன் சிஇஓ தியரி டெலாபோர்ட் ராஜினாமா செய்த தகவல் ஒட்டுமொத்த ஐடி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய வெளியேற்றத்திற்கு அசிம் பிரேம்ஜி விப்ரோ-வின் மோசமான நிலை குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் பேசியது தான் காரணம் என கூறப்பட்டது.
இந்த அதிர்வுகள் முடிவதற்கு முன்பாக அசிம் பிரேம்ஜி முக்கியமான முதலீட்டைச் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

கிராபிக் டிசைன் மற்றும் போட்டோ எடிட்டிங் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேன்வா (Canva) நிறுவனத்தில், விப்ரோ நிறுவனர் மற்றும் தலைவர் அசிம் பிரேம்ஜியின் சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட், $50-$70 மில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கேன்வா நிறுவனம் சமீபத்தில் இரண்டாம் நிலை சந்தை பங்கு விற்பனையை நடத்தியது. இதில், 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள், தற்போதைய பங்குதாரர்கள் மற்றும் புதிய பங்குதாரர்கள் மத்தியில் கைமாறியது.
இந்த பங்குகள் கேன்வா நிறுவனத்தை 26 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கைமாறியது, இந்த விற்பனையில் தான் அசிம் பிரேம்ஜி-யின் பிரேம்ஜி இன்வெஸ்ட் பங்குகளை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் கேன்வா மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவன தரப்பில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
கேன்வா நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களில் IPO வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில் $26 பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தில், $50-$70 மில்லியன் முதலீடு செய்வது ஒரு சிறந்த வாய்ப்பாகப் பங்குச்சந்தை வல்லுனர்கள் பார்க்கின்றனர். ஆனால் அசிம் பிரேம்ஜி-யின் பிரேம்ஜி இன்வெஸ்ட்-ன் இந்த முதலீட்டுக்கு மற்றொரு கோணம் உள்ளது.
பிரேம் இன்வெஸ்ட் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, Generative AI துறையில் உருவாக்கியுள்ள புரட்சியில் பணம் பார்க்கும் இலக்குடன் இத்துறை சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது.
சமீபத்தில் அசிம் பிரேம்ஜி-யின் பிரேம்ஜி இன்வெஸ்ட் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிப்போகிராடிக் AI (Hippocratic AI) என்ற AI நிறுவனத்தில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து கேன்வா நிறுவனத்தில் முதலீடு செய்து வந்துள்ளது. Hippocratic AI நிறுவனம் ஹெல்த்கேர் பிரிவில் இயங்கி வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications