விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, தற்போது விப்ரோ நிர்வாகத்தைத் தனது மகன் ரிஷாத் பிரேம்ஜி-யிடம் ஒப்படைத்து விட்டுத் தற்போது நிர்வாகக் குழுவின் உறுப்பினராக மட்டும் உள்ளார். அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறிய நாள் முதல் அதிகப்படியான நன்கொடை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாகக் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் நன்கொடை கொடுத்த தனிநபரில் அசிம் பிரேம்ஜி முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்நிலையில் அசிம் பிரேம்ஜி நிறுவனத்தின் சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்தின் மூலம் புதிதாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
தன்லா பிளாட்பார்ம்
கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் சேவை பிரிவில் இயங்கி வரும் தன்லா பிளாட்பார்ம் நிறுவனத்தில் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகத் தன்லா நிறுவனத்தின் சிஇஓ உதய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரேம்ஜி இன்வெஸ்ட்
தன்லா பிளாட்பார்ம் நிறுவனத்தில் பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் பைனியர் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் இணைந்து 13.50 லட்சம் பங்குகளையும், பிராசிம் டிரேடிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் 6.52 லட்சம் பங்குகளை ப்ரீமியம் விலையான 1200 ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
உதய் ரெட்டி
இதன் மூலம் உதய் ரெட்டி தலைமையிலான தன்லா பிளாட்பார்ம் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்த 3 நிறுவனங்கள் வாங்கிய பங்குகள் பேனியன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்த பங்குகளாகும்.
அசிம் பிரேம்ஜி
இந்நிலையில் தன்லா நிறுவனத்தின் சிஇஓ உதய் ரெட்டி தனது டிவிட்டரில் எங்களுடைய மார்க்கியூ இன்வெஸ்டர்ஸ் பிரிவில் அசிம் பிரேம்ஜி-ஐ வரவேற்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரேம்ஜி இன்வெஸ்ட் முதலீடுகள்
அசிம் பிரேம்ஜி தலைமையிலான பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் பல துறை நிறுவனத்தில் ஆரம்பக்கட்டத்திலும், வளர்ச்சிக்கான முதலீட்டையும் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் நுகர்வோர், நிதியியல், டெக்னாலஜி, உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ்
இதேபோல் தன்லா பிளாட்பார்ம் பல முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை திரட்டியுள்ளது. சமீபத்தில் ஜூன் 2021ல் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்மால்கேப் வோர்ல்டு பண்ட் இன்க் நிறுவனங்கள் தன்லா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications