இந்தியாவின் பணக்கார பில்லியனர்களைப் பற்றி பேசும்போது அவர்களில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் தான் நம் நினைவுக்கு வருவது. சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜியும் இவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார். 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் இவருடைய வருவாய் 2200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அதிக வருமானம் ஈட்டிய நபர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அசிம் பிரேம்ஜியின் நிகர மதிப்பு: பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, அசிம் பிரேம்ஜி டிவிடெண்டுகள் மற்றும் பங்குகளை வாங்குவதன் மூலம் சுமார் ரூ.9,100 கோடி சம்பாதித்துள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் ரூ.400 கோடி.
அனால் டிவிடெண்டுகள் மற்றும் பங்குகள் மூலம் சம்பாதித்த வருவாய் அவருடைய ஆண்டு வருமானத்தை விட 22 மடங்கு அதிகமாகும். இந்த அபரிமிதமான அதிகரிப்பின் காரணமாக, 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் அதிகம் சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் பிரேம்ஜி 27-வது இடத்தில இருந்து 25-வது இடத்திற்கு உயர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, அசிம் பிரேம்ஜியின் நிகர மதிப்பு ரூ. 1,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் யார் எவ்வளவு சம்பாதித்தார்கள்?: பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், லாபத்தைப் பொறுத்த வரையில் கேள்விக்கு இடமில்லாத ராஜாவாகத் திகழ்கிறது. டாடா சன்ஸ் டிவிடெண்ட்கள் மற்றும் பங்குகளின் மூலம் ரூ.36,500 கோடி வருமானம் ஈட்டியுள்ளது, இது இந்த நிதியாண்டில் 7.5 சதவீதம் ஆகும். இது 2022 முதல் 2023-ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட 7.5 சதவீதம் அதிகமாகும்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி, எஸ்.கோபாலகிருஷ்ணன், தினேஷ் கே மற்றும் எஸ்டி ஷிபுலால் ஆகியோர் 100 சதவீதம் வருவாய் அதிகரித்து ரூ.3,745.3 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
விப்ரோவின் அசிம் பிரேம்ஜி டிவிடெண்டுகள் மற்றும் பங்குகளை வாங்குவதன் மூலம் ரூ.9,100 கோடி வருமானம் ஈட்டி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
HCL உரிமையாளர் ஷிவ் நாடாரின் குடும்பம் அதிகம் சம்பாதித்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, சுமார் ரூ. 8,600 கோடிக்கு மேல் குடும்ப வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.3 சதவீதம் அதிகம்.
நான்காவது இடத்தில், வேதாந்தாவின் அனில் அகர்வால் உள்ளார். இவர் இந்த நிதியாண்டில் சுமார் ரூ. 6,799 கோடி சம்பாதித்துள்ளார். 2022 முதல் 2023-ஆம் ஆண்டு வருவாயில் இருந்து 73.8 சதவீதம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications