பிகாம் பட்டதாரி தான், ஆனா கையில் ரூ.58,766 கோடி நிறுவனம்.. பட்டயை கிளப்பும் சந்தீப் சிங்..!

பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் தங்களது வணிக சாம்ராஜ்ஜியத்தை அடுத்த தலைமுறையினருக்காக விட்டுச் செல்வார்கள். கடினமான உழைப்பினாலும் குடும்பத்தாரின் ஆதரவினாலும் தங்களது நிறுவனங்களை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். அவர்களது மறைவுக்குப் பின் குடும்ப உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தை எடுத்து நடத்துவார்கள்.

அப்படித்தான் Alkem Laboratories பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சந்தீப் சிங் ஒரு வாய்ப்பை பெற்றார். ஆல்கெம் லேபரட்டரீஸை உருவாக்கிய சம்பிரதா சிங்கின் பேரன் சந்தீப் சிங்.

பிகாம் பட்டதாரி தான், ஆனா கையில் ரூ.58,766 கோடி நிறுவனம்.. பட்டயை கிளப்பும் சந்தீப் சிங்..!

பார்மாசூட்டிகல் தொழிலில் சந்தீப் சிங்குக்கு 18 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 40 வயதான சந்தீப் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை முன்னெடுத்து செய்கிறார். 2013 ஆம் பி.காம் பட்டப்படிப்பை முடித்தவுடனேயே இந்த நிறுவனத்தின் போர்டு உறுப்பினரானார் சந்தீப். நிர்வாக இயக்குநராக 2017 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார்.

Blue Tribe Foods என்ற நிறுவனத்தையும் சந்தீப் நடத்தி வருகிறார். மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு ஆல்கெம் லேப் பார்மாசூட்டிகல் தயாரிப்புகளை செய்து இந்தியாவிலும் உலகளவிலும் விற்று வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.58,766 கோடி ஆகும். 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் அதன் பங்கு விலை ரூ.4,915 ஆக இருந்தது.

சந்தீப்பீன் வெற்றியை கௌரவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான 'வளர்ந்துவரும் பார்மா லீடர் விருது' மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் 'ET AND SPENCER STUART 40 under 40’ என்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

அல்கெம் லேபாரேட்டரீஸ் நிறுவனம் 1935 ஆம் ஆண்டில் சம்பிரதா சிங்கால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பைட்டோ கெமிக்கல்ஸ் துறையில் முன்னோடியாக 75 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், உலகளவில் 35 நாடுகளில் உள்ள மருந்து, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துத் தொழில்களுக்கு தாவரத்திலிருந்து மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதில் அனுபவம் வாய்ந்தது.

இந்தியா முழுவதும் 3 உற்பத்தித் தளங்கள் மற்றும் ஐரோப்பா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்ட 4 சர்வதேசப் பிரிவுகளுடன், உலகளவில் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஆல்கெம் சர்வதேச லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது.

35 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யும் ஒரு ஏற்றுமதி சார்ந்த நிறுவனமாகும். உற்பத்தியில் 90% இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 20 நாடுகளில் ஒழுங்குமுறை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் அல்கெம் பார்மா நிறுவனம் சர்வதேச விரிவாக்கத்தின் மீது ஒரு கண் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் பல புதுமையான இயற்கை மருத்துவ தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+