ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முக்கியமான அடையாள ஆவணமாக மாறி உள்ளது. நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டுகள் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பால் ஆதார் அல்லது ப்ளூ ஆதார் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக பெரியவர்களுக்கு வழங்கப்படுவது பொதுவான ஆதார் கார்டு. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த ஆதார் கார்டை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில் ப்ளூ ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் என்பதை விரிவாக பார்ப்போம்.
உங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை பால் ஆதார் கார்டில் 2 முறை புதுப்பிக்க வேண்டும் என்று முன்பே ஒரு பதிவில் பார்த்திருந்தோம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குழந்தைகளின் வளர்ச்சி காரணமாக அவர்களுடைய கைரேகைகள், கருவிழி மற்றும் போட்டோ ஆகியவற்றில் 2 முறை மாற்றம் செய்ய பரிந்துரைக்கிறது.

அதன்படி முதல் புதுப்பிப்பை குழந்தைக்கு 5 வயது ஆகும்போது செய்ய வேண்டும். மீண்டும் குழந்தைக்கு 15 வயது ஆகும்போது ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த குறிப்பிடப்பட்ட வயதிற்குள் அப்டேட் செய்யவில்லை என்றால் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் குழந்தையின் 5 வயதிலும் 15 வயதிலும் ப்ளூ ஆதார் கார்டை புதுப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் போது குழந்தையின் பெயர், ஜெண்டர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர், மெயில் ஐடி போன்ற விவரங்களிலும் மாற்றம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கும் போது இந்த விவரங்களை அப்டேட் செய்தால் அது முற்றிலும் இலவசம். ஆனால் தனியாக ஆதார் விவரங்களில் மாற்றம் செய்தால் அதற்கு 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு ப்ளூ ஆதார் கார்டு பெற எப்படி விண்ணப்பிப்பது?: உங்கள் குழந்தைக்கு ப்ளூ ஆதார் கார்டு பெற, கீழ்காணும் ஸ்டெப்ஸ்களை பின்பற்றவும்.
ஸ்டெப் 1: பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையுடன் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தங்களுடைய ஆதார் கார்டை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 2: ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்து குழந்தையின் பிறப்பு சான்றிதழை இணைக்கவும். பெற்றோர் தங்களுடைய ஆதார் நம்பரையும் வழங்க வேண்டும். அது உங்கள் குழந்தையின் ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்
ஸ்டெப் 3: குழந்தையின் புகைப்படம் ஆதார் பதிவு மையத்தில் எடுக்கப்படும். பதிவு முடிந்ததும், பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ப்ளூ ஆதார் கார்டு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications