இந்திய மக்கள் மத்தியில் ஆயுர்வேத பொருட்களுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் வேளையில், இத்துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் பதஞ்சலி ஆயுர்வேத் தன்னுடைய தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிட்டது.
இதை கண்டித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்-க்கு நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனர் பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளார்.

பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பிய விளம்பரங்களுக்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸுக்கு பதில் அளிக்கத் தவறியது குறித்து விளக்கம் அளிக்கும்படி பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. "இனி இதுப்போன்ற தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட மாட்டாது" என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா உறுதி அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மார்ச் 19 அன்று 5% க்கும் அதிகமாக சரிந்தன. ஆனால், பின்னர் பங்கு விலையில் ஓரளவு மீட்சி ஏற்பட்டு, இந்நிறுவன பங்குகள் 0.7% உயர்ந்து ரூ.1,368.80 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை வர்த்தகத்தில் Patanjali Foods பங்குகள் 0.83 சதவீதம் உயர்ந்து 1370.20 ரூபாய் அளவில் வர்த்தகமானது. பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் கொரோனா காலத்தில் தொற்று பரவுவதைத் தடுக்கும் மருந்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் முறைகேடான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்ய உத்தரவிட்டது.
மேலும் உச்ச நீதிமன்றம் தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திடம் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆயுஷ் அமைச்சகத்தைக் கண்டித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தை மருந்து மற்றும் மேஜிக் தீர்வுகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஆயுஷ் (AYUSH) - ஆயுர்வேதம், யோகா & நியுரோபதி, யுனானி, சித்த மருத்துவ முறை, ஹோமியோபதி ஆகிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான அமைச்சகம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications