இந்தியாவின் மிகவும் பிரபலமான யோகா குரு-வாக அறியப்படும் பாபா ராம்தேவ், நாட்டின் பிரபலமான பிஸ்னஸ்மேன் ஆகவும் உள்ளார். பாபா ராம்தேவ் துவங்கிய பதஞ்சலி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமங்களை, தவறான விளம்பரங்கள் காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிக தடை செய்துள்ளதாக அம்மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கிறது.
ஏற்கனவே பாபா ராம்தேவ் சுப்ரீம் கோர்ட் வழக்கில் சிக்கித் தவித்து வரும் வேளையில், உத்தரகண்ட் மாநில அரசின் இந்த உத்தரவு கூடுதல் பின்னடைவாகும்.

பாபா ராம்தேவ்-ன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் யோகா சிகிச்சைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான இந்நிறுவனத்தின் மருந்துகள் இந்தியா உட்பட பல நாடுகளில் பிரபலப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த மருந்துகள் முறையற்ற வகையில், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.
பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளைத் தவறாக விளம்பரப்படுத்திய காரணத்தால், விளம்பரப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவுகளையும் பின்பற்றத் தவறியதற்காக, இந்திய உச்ச நீதிமன்றம் சமீப காலங்களில் தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தைக் கண்டித்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், ஏப்ரல் 15 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ராம்தேவ் நிறுவனங்களின் உற்பத்தி உரிமங்கள்
இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை இந்த செய்தி பொது வெளியில் வராத நிலையில் முதன் முதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
உரிமம் இடைநிறுத்தம் செய்யப்பட்ட 14 மருந்துகளின் பட்டியலில் ஆஸ்துமா, மூச்சிரைப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கான ராம்தேவின் பாரம்பரிய மருந்துகளும் அடங்கும். உத்தரகண்ட் மாநில ஒழுங்குபடுத்தும் அமைப்பின் மிதிலீஷ் குமார் தனது உத்தரவில், "உற்பத்தி உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன" என்று எழுதியுள்ளார்.
இதற்கிடையில் யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி குழுமத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியிலேயே வர்த்தகம் கைமாற உள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனர் பாபா ராம்தேவ் நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடியால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் என பல பிரச்சனைகள் பதஞ்சலி நிறுவனத்தைச் சுற்றி வரும் வேளையில் பதஞ்சலி நிறுவனத்தில் புதிய மாற்றம் நடக்க உள்ளது.
டூத்பேஸ்ட், எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்ற அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் இந்த வர்த்தகத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாபா ராம்தேவ் அவர்களால் நிறுவப்பட்ட மற்றொரு நிறுவனமான பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த அத்தியாவசிய பொருட்கள் பிரிவை வாங்குவதற்கான திட்ட அறிக்கையும் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications