பாபா ராம்தேவின் கொரோனில் கிட்டுக்கு 25 -40% தள்ளுபடி.. பதஞ்சலி கொடுத்த ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் என இரண்டும் வேகமாக போட்டி போட்டுக் கொண்டு பரவி வருகின்றது. இதற்கிடையில் இது இன்னும் எந்தளவுக்கு மோசமான நிலைக்கு செல்லுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

 

இதற்கிடையில் பல நிறுவனங்கம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் என தயாரித்து வருகின்றன.

இந்த சமயத்தில் கடந்த 2020ம் ஆண்டே பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான கொரோனா கிட்டை பாபா ராம்தேவ் அறிமுகம் செய்தார்.

சென்னை ஃபாக்ஸ்கான் ஆலை ஜனவரி 12 திறப்பா.. 25 நாட்களுக்கு பிறகு சூப்பர் நியூஸ்..!

கொரோனில் மருந்து

கொரோனில் மருந்து

இந்த மருந்துக்கான ஆதாரங்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அப்போது பெரும் சர்ச்சையே வெடித்தது. எனினும் இந்த கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியது என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தான், இந்த மருந்து பிறகு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மாத்திரைகள் மற்றும் மூக்கில் விடும் மருந்துகள் என இருவகை உண்டு. இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

40% வரையில் தள்ளுபடி

40% வரையில் தள்ளுபடி

இதற்கிடையில் தற்போது நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாபா ராம்தேவின் நுகர்வோர் பொருட்கள் நிறுவனம், அதன் கொரோனில் கிட்டுக்கான விலையில் 40% வரையில் தள்ளுபடியினை வழங்குவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த கிட்டினை அருகிலுள்ள பதஞ்சலி மையம், பதஞ்சலி ஆப் மற்றும் அதன் இணையத்தளத்திலும் வாங்கலாம்.

மொத்த விற்பனைக்கும் தள்ளுபடி
 

மொத்த விற்பனைக்கும் தள்ளுபடி

கொரோனா மற்றும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில் இந்தியர்களுக்கு உதவும் வகையில், அனைத்து பதஞ்சலி மையங்களிலும் கொரோனில் கிட்களுக்கு 25% தள்ளுபடியினை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த விற்பனைக்காக வாங்குபவர்களுக்கு 40% வரையில் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

யாருக்கு 40% தள்ளுபடி

யாருக்கு 40% தள்ளுபடி

கொரோனாவின் பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனில் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க, நாங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளோம். குறிப்பாக 24 பாக்ஸ்கள் அல்லது அதற்குமேற்பட்ட பெட்டிகள் கொண்ட அட்டை பெட்டியை வாங்க விரும்புவோருக்கு 40% தள்ளுபடி வழங்கப்படும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

500 ஆய்வாளர்கள் உழைப்பு

500 ஆய்வாளர்கள் உழைப்பு

பதஞ்சலியில் உள்ள 500 ஆய்வாளர்கள் கொரோனில்லை உருவாக்குவதற்காக உழைத்துள்ளனர். ஜெர்மன் ஆப் செப்பரேஷன் என்ற ஜெர்மன் பத்திரிக்கை தனது முதல் பக்கத்தில் கொரோனில் பற்றி பதிவு செய்துள்ளதாகவும் பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev's patanjali ayurved offers up to 40% discount on coronil

Baba Ramdev's patanjali ayurved offers up to 40% discount on coronil/பாபா ராம்தேவின் கொரோனில் கிட்டுக்கு 25 -40% தள்ளுபடி.. பதஞ்சலி கொடுத்த செம ஆஃபர்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X