பாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனம், கடந்த செவ்வாய்கிழமையன்று தனது செப்டம்பர் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் பாதியில் 3,562 கோடி ரூபாயை வருவாய் கண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் பாதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?

இதே ஹரித்துவாரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 1,793 கோடி ரூபாய் வருவாயுடனும், இதே ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 1,769 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் பதஞ்சலியின் அனைத்து வணிகங்களையும் இந்த வருவாய் குறிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனம் ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் 937 கோடி ரூபாய் மற்றும் செப்டம்பர் காலாண்டில் 1,576 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது? என்ன ஆவணங்கள் தேவை? #Fastagடிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது? என்ன ஆவணங்கள் தேவை? #Fastag

எப்படி எனினும் அந்த நிறுவனம் நிகரலாபத்தை வெளியிடவில்லை. இது கடந்த 2018 - 2019ல் பதஞ்சலி ஆயுர்வேதிக் வருவாய் 8,329 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. இந்த குழுவின் வருவாய் இந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

விநியோக விற்பனையில் வலுவடைந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு எதிரொலியால் சற்று வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பதஞ்சலி வேகமாக நுகரக்கூடிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதிக் மருந்துகள் பிரிவில் நல்ல நிலையில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த நிறுவனம் பிஸ்கட் மற்றும் நூடுல்ஸ், பால் பொருட்கள் துறையில் விற்பனை களைகட்டியுள்ளதாகவும் பதஞ்சலி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகச் சிறந்த யோக நிபுணர்களில் ஒருவரான பாபா ராம்தேவ், அவரது சொந்த ஆயுர்வேத தயாரிப்புகளான பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்புகளை சில வருடங்களுக்கு முன்பு அவர் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் இந்த பதஞ்சலியின் ஆயுர்வேத பொருட்களுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையிலேயே இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் பாதியில் நல்ல லாபம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை இதன் மூலமே அறிய முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev’s Patanjali ayurved posts September quarter result

Baba Ramdev’s Patanjali ayurved posts September quarter revenue. and june quarter revenue, but it’s not posts net profit any other
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X