இந்த உலகம் குறிப்பிட்ட சிலரை தான் தீர்க்கதரிசிகள் என அழைக்கும். அந்த வகையில் பாபா வங்காவை தெரியாதவரே இருக்க முடியாது. பாபா வாங்க வெளியிடக்கூடிய கணிப்புகள் உலகம் முழுவதும் கவனம் பெறும் . ஏனெனில் அவர் கூறிய பெரும்பாலான விஷயங்கள் அப்படியே நிகழ்ந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் பாபா வாங்க அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என கூறி இருக்கிறார் என்பதை மக்கள் ஆர்வத்தோடு தெரிந்து கொள்கின்றனர் பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் தான் பாபா வாங்க . இவருடைய முழு பெயர் Vangeliya Pandeva Dimitrova என்பதாகும். 1911 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 12 வயதிலேயே பார்வையை இழந்தார். ஆனால் இதனால் தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக மக்கள் நம்புகின்றனர்.

இவர் 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார் ஆனால் இனி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் என்ன நடக்க போகிறது என்பதை அவர் கணித்து குறிப்பு எழுதி இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல், 2004 ஆம் ஆண்டு செயற்பட்ட சுனாமி, நிலநடுக்கம், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சரியாக கனித்துக் கூறியவர் தான் பாபா வாங்கா.
ஏலியன்கள் : 2026 ஆம் ஆண்டின் இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கணிப்புகள் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன . ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள் என கூறியுள்ளார். 2026இல் ஒரு விண்வெளி பொருள் பூமியை வந்தடையும் இதன் மூலம் மனிதர்களுக்கு வேற்று உலகவாசிகளுடன் தொடர்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏஐ ஆதிக்கம் அதிகமாகும்: பாபா வாங்கா தன்னுடைய கணிப்புகளில் ஏஐ என குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்கள் அதிகமாக இயந்திரங்களை சார்ந்தவர்களாக மாறுவார்கள் என அவர் கூறியிருக்கிறார் . ஏற்கனவே ஏஐ தன்னுடைய கிளைகளை பரப்ப தொடங்கிவிட்டது. மனிதர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கிறார்கள், மனித வடிவிலான ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. எனவே 2026இல் இன்னும் ஏஐ ஆதிக்கம் என எதிர்பார்க்கலாம்.
இயற்கை பேரிடர்கள்: 2026 ஆம் ஆண்டில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழும் என்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தான் அவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தங்கம்: தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்றும் அவர் கூறியிருக்கிறார் .2025ஆம் ஆண்டிலேயே தங்கம், வெள்ளி விலை பெரிய அளவில் உயர்ந்தது. அந்த வகையில் 2026இலும் உயரும் என்பதே பாபா வாங்காவின் கணிப்பாக உள்ளது.
புவிசார் பதற்றங்கள்: உலக நாடுகள் இடையே அமைதியின்மை , மக்கள் அதிக அளவில் இடம் பெயர்வது உள்ளிட்டவை ஏற்படும் என்றும் ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகள் இதனால் பாதிக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.
ரஷ்ய தலைவர்: ரஷ்யாவின் தலைவர் ஒருவர் உலகின் சக்திவாய்ந்த் நபராக உருவெடுப்பார் என பாபா வாங்கா கணித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை பகைத்து கொண்டுள்ள நிலையில் ஏற்கனவே புதின் இந்தியா மற்றும் சீனாவை ஒருங்கிணைத்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!



Click it and Unblock the Notifications