டாடா சன்ஸ்-ஐ புறவாசல் வழியாக கைப்பற்றும் நோயல் டாடா-வின் தந்திரம்.. உண்மையை உடைத்த ஜிம்மி டாடா!

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் அதிகாரத்தை நோயல் டாடா தலைமையிலான டாடா டர்ஸ்ட் மறைமுகமாகக் கைப்பற்ற முயற்சித்து வருவதாக ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கும், டாடா டிரஸ்ட் அமைப்பிற்கும் மத்தியிலான முரண்பாடு, ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாக டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன் நியமிக்க முடிவு எடுப்பதில் இருந்து மிகப்பெரியதாக வெடித்ததுள்ளது.

டாடா சன்ஸ்-ஐ புறவாசல் வழியாக கைப்பற்றும் நோயல் டாடா-வின் தந்திரம்.. உண்மையை உடைத்த ஜிம்மி டாடா!

இந்த நிலையில் டாடா டிர்ஸ்ட் அமைப்பின் நீண்ட கால உறுப்பினரும், டாடா குடும்பத்தின் 3 நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரும், ரத்தன் டாடாவின் இளைய சகோதரருமான ஜிம்மி டாடா அதிரடியான கருத்துக்களை முன்வைத்து ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் அதிரவைத்துள்ளார்.

டாடா டிரஸ்ட்களில் நோயல் டாடாவின் குடும்ப உறுப்பினர்கள் பலரைத் தொடர்ந்து நியமிப்பது மூலம் ஓரே குடும்பம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டை, அக்குடும்பம் மறைமுகமாகப் பெறுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

Also Read

மேலும் அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அதிகமான நபரை டாடா டிரஸ்ட் அமைப்பில் சேர்வதே தவறானது. நோயல் டாடா, டாடா சன்ஸ் நிர்வாகத்தை புறவாசல் வழியாக கைப்பற்றும் முயற்சிக்கிறார் என வெளிப்படையாக ஜிம்மி டாடா விமர்சனம் செய்துள்ளார்.

இதோடு டாடா குடும்பம் டிரஸ்ட் அமைப்புகளை உருவாக்கியதே மக்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செலவு செய்வதற்காகத் தான். மேலும் டிரஸ்ட்-ன் உறுப்பினர்களின் பணி டாடா குழுமத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பது தான், டாடா குழுமத்தைச் சொந்தம் கொண்டாடுவதற்காக அல்ல எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் Articles of Association-ல் 2013-14 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் தற்போதைய நிர்வாக நிர்வாகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் என தெரிவித்தார் ஜிம்மி டாடா. முந்தைய விதிமுறைகள் டிரஸ்ட் அமைப்புக்கும், ஆப்ரேட்டிங் அமைப்பான டாடா சன்ஸ்-க்கும் ஒரு தெளிவான கோடு இருந்தது.

Recommended For You

ஆனால் 2013-14ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம் டாடா டிரஸ்ட் சேர்மன்-க்கு Veto பவர் கிடைத்தது. இந்த வீட்டோ பவர் மூலம் டைரெக்டர் நியமிப்பதில் துவங்கி, நிர்வாக குழுவின் ஒட்டுமொத்த முடிவைச் சமரசம் செய்யும் அதிகாரத்தைக் கொடுத்தது எனத் தெரிவித்துள்ளார் ஜிம்மி டாடா.

இறுதியாக ஜிம்மி டாடா, டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கும் முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜிம்மி டாடா. மேலும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ஐ ஆர்பிஐ-யின் விதிமுறைக்கு இணங்க, NBFC விதிமுறைகளுக்கு ஏற்ப பட்டியலிடும் முடிவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் அதிகாரத்தை டாடா டிரஸ்ட் பெறுவதற்காகவே நோயல் டாடா பல மாற்று திட்டத்தை முன்வைத்து வருகிறார். நோயல் டாடா கையிலும், நோயல் டாடா குடும்பத்தின் கையிலும் நிர்வாகம் செல்லக் கூடாது என்பதற்காக ஜம்மி டாடா தற்போது களமிறங்கியுள்ளார்.

டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் மத்தியிலான நிர்வாக கோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜிம்மி டாடாவும், நோயல் டாடா குடும்பம் அல்லாது டாடா குடும்ப உறுப்பினர்களும் விரும்புவதாகத் தெரிகிறது. இதேவேளையில் டாடா டிரஸ்ட் அமைப்புகள் பல்வேறு வழக்குகளையும், விசாரணைகளையும் தற்போது எதிர்கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+