கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் பல பிரச்சனைகள் ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதற்கு முன் வரை ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது, சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்களின் வேலைகளை பறிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு வழி வகுத்துக் கொண்டிருந்த கொரோனா, இப்போது வேறு ஒரு பரிமாணத்தை எடுத்து இருக்கிறது.
ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையும் உண்மையாகவே நிலைகுலையச் செய்வது.
அப்படி என்ன பிரச்சனை
இப்போது, வங்கிகள் வியாபாரிகளுக்கும் வியாபார கம்பெனிகளுக்கும் கொடுத்த கடனை, திருப்பி வசூலிக்கும் சூழல் இல்லை. ஆனால் கொரோனா வைரஸால் லாக் டவுன் நீடித்தால், வங்கிகள் கொடுத்த கடன் மோசமான கடன்கள் ஆகிவிடும். இப்படி செயல்படாத கடன் அதிகரித்தால், வங்கிகள், மற்ற வியாபாரிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பிசினஸ் திட்டங்களுக்கு
கடன் கொடுக்க போதுமான பணம் இருக்காது.
பிரச்சனையின் ஆழம்
ஏற்கனவே, இந்திய வங்கிகள் கடந்த செப்டம்பர் 2019 கணக்குப் படி 9.35 லட்சம் கோடி ரூபாய் மோசமான கடன்களாக இருக்கின்றன. இதை Soured Loan என்றும் அழைக்கிறார்கள். இந்த 9.35 லட்சம் கோடி ரூபாய் என்பது, இந்திய வங்கிகளின் ஒட்டு மொத்த கடன் சொத்துக்களில் 9.1 % என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கலாம்
தற்போது கொரோன வைரஸ் லாக் டவுனால், இந்த 2020 - 21 நிதி ஆண்டு முடிவில், வங்கிகளின் மோசமான கடன் 9.1 %-ல் இருந்து 18 - 20 % வரை அதிகரிக்கலாம் என அரசு வட்டாரங்களிலேயே பேசிக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது ரூபாயில் சுமாராக 18.70 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள்வது சிரமம்
தற்போது வங்கிகள் கொடுத்து இருக்கும் மொத்த கடனில் 20 - 25 சதவிகித கடன்கள் ஒழுங்காக திரும்பி வருவது சிரமம் எனவும் அதிகாரிகள் வட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம். இதே நிலை நீடித்தால், செயல்படாத கடன்கள் அதிகரிக்கும். அதனால் புதிய கடன் வளர்ச்சி நேரடியாக பாதிக்கப்பட்டு, இந்திய பொருளாதாரம், கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வது சிரமமாகும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
10 நகரங்கள்
இந்திய பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய பெரு நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, தானே, ஹைதராபாத், அஹமதாபாத் இந்தூர் என எல்லா பெரு நகரங்களும் ரெட் சோனில் தான் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதும் நமக்கு அச்சத்தைக் கிளப்புகிறது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் தேக்கத்தில் தான் இருக்கும்.
கருத்துக்கள்
ஒரு சிலர், அரசு தான் தலையிட்டு ஏதாவது ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும், இல்லை என்றால் பொருளாதாரம், அடுத்த சில காலாண்டுகளுக்கு வளர்ச்சி காண்பது சிரமமாகிவிடும் என்கிறார்கள். இன்னும் சிலரோ, ஆர்பிஐ மோசமான கடன்களுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிறார்கள்.
ஆர்பிஐ
ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி, 90 நாட்களாக இருந்த செயல்படாத கடன் காலத்தை 180 நாட்களாக அதிகரித்து இருப்பது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு மேலும் ஆர்பிஐ தன் விதிகளை தளர்த்தி, வங்கிகளின் செயல்படாத கடன்களை அதிகரிப்பதை தடுக்குமா என்பதை ஆர்பிஐ தான் சொல்ல வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications