இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மோசமான செய்தி! வேரியபிள்பே போனஸ் 80% ஆக குறைவு!

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தில் 3,23,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் செயல்திறன் அடிப்படையிலான போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் 3ம் காலாண்டுக்கு தற்போது போனஸ் அறிவித்துள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் வருடாந்திர ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், முன்பாகவே போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் மூன்றாம் காலாண்டில் 80% போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் மொத்த பணியாளர்களில், டெலிவரி மற்றும் விற்பனை பிரிவு ஊழியர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சராசரி ஊதியம் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 10 சதவீத புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு, போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் ஒரு ஊழியர் கூறியதாவது, கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 5-10 சதவீத புள்ளிகள் குறைத்து ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது, சிலர் செயல்திறன் அடிப்படையில், போனஸில் 100% கூட பெற்றனர் என்று கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மோசமான செய்தி! வேரியபிள்பே போனஸ் 80% ஆக குறைவு!

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஊழியர்களின் நிகர ஊதியத்தில் தோராயமாக 85% பெற்றனர். ஆனால் இந்தமுறை ஊழியர்கள் யூனிட் நிலை மதிப்பீட்டில் சராசரியாக 75% பெற்றனர், 'சிறந்த' செயல்திறன் கொண்ட ஊழியர்கள் 100%, 'பாராட்டத்தக்க செயல்திறன் கொண்டவர்கள் 85% வரை ஊதியம் பெற்றனர். மேலும், ஜாப் லெவல் 5 (JL5) மற்றும் ஜாப் லெவல் 6(JL6) வரையில் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு 70% வரை ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாப் லெவல் 5 (JL5) வரையில் உள்ள ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தங்கள் சம்பள உயர்வுக்கான கடிதங்களைப் பெறலாம், சம்பள உயர்வு ஜனவரி 1 முதல் கணக்கிட்டு கொடுக்கப்படும். மேலும் ஜெஎல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் உள்ள ஊழியர்கள், அதாவது மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் மற்றும் டெலிவரி மேனேஜர்கள் ஆகியோருக்கு மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு கடிதங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

முன்னதாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அக்டோபர்-டிசம்பர் காலத்திற்கான வேரியபிள்பே போனஸ் பிப்ரவரியில் வழங்கியது. இதில், தோராயமாக 70% ஊழியர்கள் முழு ஊதியத்தைப் பெற்றனர். சீனியர் லெவல் ஊழியர்கள் 20% முதல் 40% வரை குறைந்த ஊதியங்களைப் பெற்றனர். கிரேடுகள் C3 மற்றும் அதற்குக் கீழே உள்ள ஊழியர்கள் முழு வேரியபிள்பே போனஸை பெற்றனர். வேரியபிள்பே போனஸ், சதவீதங்கள் தனிப்பட்ட செயல்திறன் மற்றும் காலாண்டு பங்களிப்புகளுக்கு ஏற்ப மாறுபடும்.

போனஸ் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்ட போதிலும், இன்ஃபோசிஸ் நிதியாண்டிற்கான வருவாய் கணிப்பை 4.5%-5.0% ஆக அதிகரித்தது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனம் நல்ல முடிவுகளைப் பதிவு செய்தது, இதில் நிகர லாபம் 11.4% அதிகரித்து, 800 மில்லியன் டாலர்களை எட்டியது மற்றும் வருவாய் 7.6% அதிகரித்து, மொத்தம் 4.9 பில்லியன் டாலர்களை எட்டியது.

இதுதொடர்பாக நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் பங்குச் சந்தையில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வெற்றி உங்கள் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இந்த வெற்றியில் பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+