மும்பை: கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு துறைகளிலும் இருக்கும் வேலையாவது இருக்குமா? சம்பளம் வருமா? வராதா என்ற பதற்றமான நிலை இருந்து வந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சம்பள அதிகரிப்பு, தீடீர் போனஸ் என பல சலுகைகளால் சந்தோஷத்தில் ஐடி துறையினர் இருந்தனர்.
சொல்லப்போனால் சில நிறுவனங்கள் இரு இலக்கில் சம்பள அதிகரிப்பினை எல்லாம் வாரி வழங்கின. மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி ஊழியர்கள் காட்டில் பண மழை என்றே கூறலாம்.
சம்பளம் குறையலாம்
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஐடி ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சராசரியான சம்பளம் என்பது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு இருந்த சராசரியான 9.4%ல் இருந்து 9.1% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி துறையினர் மிகப்பெரிய செலவு குறைப்பினை ஏற்கனவே செய்து வருகின்றனர். ஆக இந்த காலகட்டத்தில் பெரியளவிலான சம்பள அதிகரிப்பானது இருக்காது என்பது இதில் இருந்தே தெளிவாகிறது.
அட்ரிஷன் விகிதம் சரிவு
இது குறித்து டெலாய்ட் இந்தியா ஆய்வறிக்கையில், வளர்ந்த பொருளாதார நாடுகளில் நிலவி வரும் ரெசசன் அச்சம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அட்ரிஷன் விகிதம் என்பதும் சற்றே குறைந்துள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது என்றே கூறலாம். கடந்த ஆண்டு 19.7% ஆக இருந்த அட்ரிஷன் விகிதம், நடப்பு ஆண்டில் 15 - 16% ஆக சரிவினைக் கண்டுள்ளது.
தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு சம்பளம் குறைப்பு
ஆக இப்படி பற்பல நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ஐடி ஊழியர்களுக்கு ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு சம்பளம் குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐடி துறையில் அடுத்த நிதியாண்டின் முதல் பாதியிலும் தாக்கம் இருக்கலாம் என்கிறது மற்றொரு அறிக்கை. ஆக ஐடி துறையில் இப்பிரச்சனையானது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பணி நீக்கம்
ஏற்கனவே பல்வேறு ஐடி நிறுவனங்கள், டெக் ஜாம்பவான்கள் மிகப்பெரிய அளவிலான பணி நீக்கத்தினை செய்துள்ளன. ஆக அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனை சம்பளத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஊழியர்கள் மத்தியில் இது பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு?
இதில் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்ல, டிஜிட்டல் இ-காமர்ஸ் நிறுவனங்களும் சம்பள அதிகரிப்பினை குறைக்கலாம் என கூறப்படுகின்றது. டெலாய்ட் இந்தியா டேலண்ட் அவுட்லுக் 2023-ல் ஐடி துறையில் சம்பள உயர்வானது 9.1% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு உண்மையான விகிதம் என்பது 10.3% ஆகவும் இருந்தது. ஆனால் இது 10.5% ஆக எதிர்பார்க்கப்படுகிறது.
கவலையளிக்கும் முக்கிய காரணிகள்
தொடர்ந்து பணவீக்கம் என்பது அதிகளவில் இருந்து வரும் சூழலில், வட்டி அதிகரிப்பு என்பது தொடர்ந்து இருந்து வருகின்றது. மேற்கொண்டு பொருளாதாரத்திலும் மந்த நிலை இருந்து வரும் நிலையில், அட்ரிஷனும் குறைந்துள்ளது.
ஏற்கனவே ஐடி துறையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக வங்கி துறையில் நிலவி வரும் நெருக்கடி, சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால் வாடிக்கையாளர்கள் சரிவு., தேவை சரிவு என பல பிரச்சனைகள் உள்ளன.
புதிய பணியமர்த்தல் நிறுத்தம்
இதன் காரணமாக ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை பல நிறுவனங்களும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் ஐடி துறையினர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் தாக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் தாக்கம் என்பது இந்திய ஐடி துறையில் மிகப்பெரிய அளவில் இருக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications