ஜார்ஜ்டவுன், அமெரிக்கா: பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்பட்ட இந்திய ரிசர்ச் மாணவர் பதார் கான் சூரியை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பதார் கான் சூரி என்பவர் அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசாவில் வசித்து வருகிறார். இந்தியாவில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைகழகத்தில் பயின்றவர். அமெரிக்காவில் , தற்போது அமெரிக்க குடிமகளாக இருக்கும் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். இவர் விர்ஜினியாவில் வசிக்கும் இவரை திடீரென அமெரிக்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருக்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து அவரை கைது செய்துள்ளனர். இந்தியாவிற்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை தொடங்கினர்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து சூரியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவரை நாடு கடத்துவதற்கான பணிகளையும் அமெரிக்க அரசு மேற்கொண்டது. இந்த நிலையில் அமெரிக்கா காவல்துறையின் செயல்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் இவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.
விர்ஜினியாவின் கிழக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பேட்ரீசியா இந்த நபர் அடுத்த நீதிமன்ற உத்தரவு வரும் வரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளார் . அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் வகையிலும் ஆய்வில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் வகையிலும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தான் சூரியின் கைது கைது நடவடிக்கை செய்தி வெளிவந்துள்ளது.
இதனிடையே சூரியன் வழக்கறிஞர் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இப்படி ஒரு முடிவினை கையில் எடுத்திருக்கிறது என அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியனும் சூரிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அவர் நாடு கடத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைக்கு இவர் லூதியானா பகுதியில் உள்ள குடியேறிகளுக்கான தடுப்பு மையத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசியல் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக டொனால்ட் நிர்வாகம் செயல்படுவதாக கூறியிருக்கும் சமூக ஆர்வலர்கள் எதிரான ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு நபரை அவருடைய வீட்டிலிருந்தும் குடும்பத்தில் இருந்தும் பிரித்து தடுப்பு காவலில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும் என கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னதாக அமெரிக்காவுக்கு எதிரான வெறுப்புணர்வு கொண்ட தகவல்களை செல்போனில் வைத்திருந்த காரணத்திற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது அமெரிக்க காவல்துறையினால் தடுக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
பதார் கான் சூரி ஏற்கனவே அமைதி மற்றும் மோதல் என்ற தலைப்பில் இந்தியாவில் தனது முனைவர் ஆய்வு படிப்பினை முடித்திருக்கிறார். தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் முது நிலை ஆய்வு படிப்பை பயின்று வருகிறார்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications