பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான நீரஜ் பஜாஜ் மும்பையில் அதிகப்படியான பணக்காரர்கள் வசிக்கும் மலபார் ஹில் பகுதியில் இதுவரையில் யாரும் வாங்கிடாத வகையில் மிகவும் காஸ்ட்லியான அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.
பொதுவாக பெரும் பணக்காரர்கள் பெரிய பெரிய வீடுகளை சொந்தமாக வைத்திருந்தாலும், பெரு நகரங்களில் தங்களுக்கும், தங்களின் குடும்பத்திற்காகவும், இதேபோல் முதலீட்டு அடிப்படையிலும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது வழக்கம்.
இதில் முக்கியமாக இன்றைய தலைமுறையினர் முக்கியமான பகுதியில், ஆடம்பர வசதிகள் நிறைந்த இடத்தில் அப்பார்ட்மென்ட் வாங்குவதை விரும்புகின்றனர். இந்த வரிசையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான நீரஜ் பஜாஜ்-ம் இணைந்துள்ளார்.
பஜாஜ் ஆட்டோ - நீரஜ் பஜாஜ்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான நீரஜ் பஜாஜ் மும்பை மலபார் ஹில் பகுதியில் கடலை பார்த்து இருக்கும் ஆடம்பர கட்டிடத்தில் ஆடம்பர டிரிப்பிளெக்ஸ் பென்ட்ஹவுஸ்-ஐ சுமார் 252.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
ஆடம்பர வீடு
இந்தியாவில் இதுவரையில் யாரும் 252.50 கோடி ரூபாய்க்கு ஒரு அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கியது இல்லை என்பதால், நீரஜ் பஜாஜ் முதலீடு புதிய சாதனை படைத்துள்ளது. நீரஜ் பஜாஜ் இந்த ஆடம்பர triplex penthouse-ஐ பிரபலமான லோதா குரூப் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார்.
லோதா மலபார்
நீரஜ் பஜாஜ் வாங்கிய இந்த அப்பார்ட்மென்ட் சொகுசு குடியிருப்பு கட்டினமான லோதா மலபார்-ன் 29, 30 மற்றும் 31வது தளங்களில் அமைந்துள்ளது. இது கவர்னர் தோட்டத்திற்கு எதிரே உள்ள வாக்கேஷ்வர் சாலையில் அமைந்துள்ளது. மேலும் லோதா மலபார் கட்டிடத்தின் ஒரு பக்கம் அரபிக் கடல் மறு பக்கம் தொங்கும் தோட்டம் இரண்டையும் தொடும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு சதுரடி 2 லட்சம் ரூபாய்
இந்த ஆடம்பர triplex penthouse பெயர் The Emperor's Palace. சுமார் 18008 சதுரடியில் அமைந்துள்ள இந்த ஆடம்பர வீட்டின் விலை ஒரு சதுரடி 1.40 லட்சம் ரூபாய். மேலும் வீட்டில் கார்பெட் ஏரியா அளவு 12,624 சதுரடி, இதன் மூலம் மொத்த ஒப்பந்த மதிப்பை கணக்கிட்டால் ஒரு சதுரடி 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக தொகைக்கு விற்கப்பட்டு உள்ளது.
8 கார்கள் பார்க்கிங்
நீரஜ் பஜாஜ் வாங்கிய இந்த அபார்ட்மென்ட்-க்கு சுமார் 15.15 கோடி ரூபாயை பத்திர கட்டணமாக வழங்கியுள்ளார், மேலும் நீரஜ் பஜாஜ் சுமார் 8 கார்களை நிறுத்தும் வகையில் பார்கிங் இடமும் பெற உள்ளார். லோதா மலபார் கட்டிடம் சுமார் 1.08 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
சஞ்சீவ் பஜாஜ் குடும்பம்
டிசம்பர் மாதம் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் சிஇஓ-வான சஞ்சீவ் பஜாஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஃபாலி பஜாஜ், சஞ்சலி பஜாஜ் மற்றும் மணீஷ் கெஜ்ரிவால் ஆகியோர் மும்பையின் மகாலக்ஷ்மி பகுதியில் கடல் பார்த்து இருக்கும் 5 அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இந்த 5 வீடுகளின் மொத்த மதிப்பு 104 கோடி ரூபாய்.
ராதாகிஷன் தமனி
டிமார்ட் தலைவர் ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பம் இணைந்து ஒரே நேரத்தில், ஒரே கட்டத்தில் சுமார் 24 ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிக் குவித்துள்ளனர். மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்திருக்கும் சூப்பர் பிரீமியம் திட்டத்தில் ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications