லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த் காலாண்டில் 19% லாபத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பஜான் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, இரண்டாவது காலாண்டில் 1,138 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

புனேவை தலைமிடமாகக் கொண்ட இந்த வாகன நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,402.42 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்ததாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..!

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7,156 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7,707 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 7 சதவீதம் வருவாய் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

இதே ஒருங்கிணைந்த அடிப்படையில், நிகரலாபம் 21.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,193.7 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே வருவாய் 7.15 சதவீதம் வீழ்ச்சி கண்டு 7,155.86 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதே வரி வட்டிக்கு முன்பு (EDITDA) 1,300 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 1,305 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 1% குறைந்து, 1,233 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு 1,242 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30 நிலவரப்படி, உபரி ரொக்கம் மற்றும் ரொக்க சமமான தொகை 16,240 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஜூன் காலாண்டில் 14,232 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த மார்ச் காலாண்டில் 14,322 கோடி ரூபாயாகவும் இருந்தது..

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வாகன விற்பனையாகது 10.53 லட்சம் யூனிட்களாகும். இது முந்தைய ஆண்டினை 10 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டில் 11.73 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் உள்நாட்டு வாகன விற்பனையானது 9 சதவீதம் குறைந்து, 5.7 லட்சம் யூனிட்களாக இருந்தது. இதே ஏற்றுமதி 12 சதவீதம் குறைந்து, 4.79 யூனிட்களாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று பிஎஸ்இ-யில் 19.15 ரூபாய் குறைந்து, 2,997 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+