பஜாஜ் CNG பைக்: இவ்ளோ காச மிச்சப்படுத்துமா? 1 கிலோமீட்டருக்கு 1 ரூபாய் தான் செலவா..?

புனே: இந்தியாவில் தற்போது இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடே இல்லை என சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் பைக்குகள் இருக்கின்றன. சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள் கூட உள்ளன.

ஆனால் பெட்ரோல் விலை உச்சத்திலேயே இருப்பதால் சாமானியர்கள் மாதந்தோறும் தங்களின் பட்ஜெட்டில் கணிசமான தொகையை பெட்ரோலுக்காகவே செலவிட நேர்கிறது. எனவே பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக ஒரு எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மக்கள் தேடி வருகின்றனர்.

 பஜாஜ் CNG பைக்: இவ்ளோ காச மிச்சப்படுத்துமா? 1 கிலோமீட்டருக்கு 1 ரூபாய் தான் செலவா..?

அப்படி தான் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வந்தது. ஆனால் எலக்ட்ரிக் இருசக்கரவாகனங்களின் விலையே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல். தற்போது அதற்கும் மாற்றாக வந்துள்ளது பஜாஜின் சிஎன்ஜி பைக்.

Compressed Natural Gas எனப்படும் சிஎன்ஜி வாயுவை கொண்டு இந்தியாவில் ஏராளமான ஆட்டோக்கள் இயங்குகின்றன. பஜாஜ் நிறுவனம் தான் இவற்றில் பெரும்பாலானவற்றை தயாரித்துள்ளது. தங்களின் இந்த தொழில்நுட்பத்தை தான் பஜாஜ் நிறுவனம் பைக்கில் பொருத்தி ஃபிரீடம் 125(Freedom 125) என்ற பெயரில் சிஎன்ஜி பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக விழா புனேவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி பைக்குகள் பல்வேறு வகைகளில் நமக்கு செலவை மிச்சபடுத்துபவையாக இருக்கின்றன என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பெட்ரோலில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு ரூ. 2.25 செலவிட வேண்டும் ஆனால் சிஎன்ஜி இருசக்கர வாகனத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு ரூ.1 செலவு செய்தால் போதும். இது மிகப்பெரிய அளவில் நமக்கு பணத்தை மிச்சப்படுத்தும். இப்படி ஒரு வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இந்த சிஎன்ஜி பைக்குக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஃப்ரீடம் 125 பைக்கில் இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி டேங்க் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோலுக்கு பதிலாக இரண்டு லிட்டர் எத்தனால் டேங்க்காக மாற்றினால் நன்றாக இருக்கும் என்ற தன்னுடைய பார்வையும் நிதின் கட்கரி முன் வைத்தார். பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும் ஆனால் சிஎன்ஜி 60 ரூபாய் செலுத்தினால் போதும் என தெரிவித்தார்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல கட்ட சோதனைகளை நடத்திய பிறகு தான் இப்படி ஒரு வலுவான கண்டுபிடிப்பை நாங்கள் கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலதிகாரி ராகேஷ் சர்மா மாதம் தோறும் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய ஒவ்வொரு தனி நபரும் சிஎன்ஜி பைக் மூலம் மாதம் தோறும் சராசரியாக 1500 ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

சிஎன்ஜி-யும் கார்பனை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள்தான், ஆனால் இதில் குறைந்த அளவிலான கார்பனே இருக்கிறது, எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பார்த்தாலும் பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்கள் மிகச் சிறந்தவையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஃப்ரீடம் 125 பைக்கின் அடிப்படை மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 95,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த இருசக்கர வாகனமானது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

இந்த இந்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதுநாள் வரை தாங்கள் எரிபொருளுக்காக செய்த செலவில் 50 சதவீதம் வரை மிச்சம் செய்ய முடியும் என பஜாஜ் நிறுவனம் கூறுகிறது. இந்த வாகனத்தின் பராமரிப்பு செலவும் கணிசமான அளவு குறையும் என தெரிவித்துள்ளது.

இந்த வாகனம் சிஎன்ஜி மட்டும் பயன்படுத்தும் போது 213 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் , பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தும்போது 2 லிட்டர் பெட்ரோலுக்கு 117 கிலோ மீட்டர் வரை செல்லும் என பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது. எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் என்பதால் நிச்சயம் இந்திய சந்தையில் இது தாக்கத்தை ஏற்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+