மும்பை: பிரபல பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்தடுத்து புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
மக்கள் பலரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புது புது மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தியாவின் சொந்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் ஆட்டோ-வை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் பயன்பாட்டில் உள்ள எலக்ட்ரிக் ஆட்டோ-க்களின் விலைக்கு நிகராக தரமான வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி டிவி18-க்கு(CNBC TV18) பேட்டியளித்துள்ள ராஜீவ் பஜாஜ், உலகிலேயே மூன்று சக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோ தான் முதலிடத்தில் இருக்கிறது என தெரிவித்தார். தற்போது சந்தையில் 88 சதவீதம் தங்கள் கைவசம் இருப்பதாக கூறிய ராஜீவ் பஜாஜ் உலகமே பசுமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அந்த பொறுப்பினை உணர்ந்து தங்களது நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
குறிப்பாக ஈ- ஆட்டோ மற்றும் ஈ- கார்கோ வாகனங்களில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் மின்சார ஆட்டோக்களுக்கான சந்தையை போலவே எலக்ட்ரிக் ஆட்டோ-க்களுக்கான சந்தையும் பிரகாசமாக உள்ளது எனக் கூறுகிறார். ஒரு மாதத்திற்கு தங்களது நிறுவனம் 50,000 முதல் 60,000 மின்சார ஆட்டோக்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்.
இந்திய சந்தையில் தற்போது விற்கப்படும் ஈ- ரிக்ஷாக்கள் தரம் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்றும் தெரிவித்தார். எனவே தங்கள் நிறுவனம் ஈ- ரிக்ஷா உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.
கூடுதலாக, ரூ.1 லட்சம் என்ற விலையில் சேட்டாக்கின் மின்சார வாகனத்தை இந்த மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 மின்சார வாகனங்கள் சேட்டாக் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிறப்பு நிதித்துறை அதிகாரியான தினேஷ் தாபர், இந்தியாவின் 60 நகரங்களில் தங்களது மின்சார மூன்று சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் சந்தையில் தங்களது மதிப்பு 30 சதவிகிதம் என்றும் கூறியுள்ளார். இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 44,000 ஈ - ரிக்ஷாக்கள் விற்பனையாகியுள்ளன. 500 உற்பத்தியாளர்கள் இவற்றை விற்பனை செய்துள்ளனர். ஆனால் இவற்றில் பெரிய அளவிலான பிராண்டுகள் எதுவும் கிடையாது. எனவே இந்த இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் தான் தற்போது பஜாஜ் ஆட்டோ இறங்கி உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications