பஜாஜ் ஃபைனான்ஸ் அதிரடி.. 52% லாபம் அதிகரிப்பு.. உற்சாகத்தில் பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 52% அதிகரித்து, அதன் ஒருகிணைந்த நிகரலாபம் 1,614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,060 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது கவனிக்கதக்கது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 63% அதிகரித்து, 1,504 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பங்கின் விலை 4.95% அதிகரித்து 4421.75 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் அதிரடி.. 52% லாபம் அதிகரிப்பு.. உற்சாகத்தில் பங்கு விலை..!

பஜாஜ் ஃபைனான்ஸின் ஒருங்கிணைந்த முடிவுகளில் அதன் முழு சொந்தமான துணை நிறுவனங்களான பஜாஜ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் பஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகளும் அடங்கும்.

இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..!இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..!

இந்த நிலையில் புதிய கடன் வழங்கிய அளவு 13% அதிகரித்து 7.67 மில்லியன் ஆக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 6.77 மில்லியன் ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டில் இதே கஸ்டமர் பிரான்சிஸி 24% அதிகரித்து 40.38 மில்லியன் ஆக அதிகரித்துள்ளதாகவும், இதே டிசம்பர் 2018 காலாண்டில் 32.57 மில்லியன் ஆகவும் இருந்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 35% அதிகரித்துள்ளதாகவும், இது 1,45,092 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,07,507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது கவனிக்கதக்கது.

இதே நிகர வட்டி வருவாய் 42 சதவிகிதம் அதிகரித்து 4,537 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 3,209 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகர வட்டி வருமானத்திற்கான மொத்த இயக்க செலவுகள் 33.9% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 34.9% ஆகவும் இருந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் மூன்றாம் காலாண்டில் கடன் இழப்புகள் மற்றும் புரவீசன்ஸ் 831 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 746 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே மொத்த வாராக்கடன் அளவு 1.61% ஆகவும், இதே நிகர வாராக்கடன் 0.70% ஆகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bajaj finance announced q3 net profit increased to 52%

Bajaj finance today announced December quarter net profit increased 52% to Rs.1,614 crore. As compares Rs.1,060 cr in same quarter in previous year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X