இந்தியாவின் மிகப்பெரிய NBFC நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் நிர்வாக இயக்குநர் அனுப் குமார் சாகா தனது தனிப்பட்ட காரணங்களால் இப்பதவி விலகியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டு வெறும் நான்கு மாதங்களிலேயே ராஜினாமா செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுப் குமார் ராஜினாமா-விற்கு பின்னர், பஜாஜ் ஃபைனான்ஸ் நிர்வாகம் இப்பதவியில் ராஜீவ் ஜெயினை நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் 2028-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் ஜெயின் தற்போது இந்நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் நிர்வாக இயக்குனர் பதவியோடு துணை தலைவர் பதவியிலும் தொடர்ந்து வகிக்க உள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராஜீவ் ஜெயின் இதற்கு முன்பு நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் என்பதால், இப்பதவிக்கு மீண்டும் அவரே பொறுப்பேற்பது வர்த்தகத்திலும், நிர்வாகத்திலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.
அனுப் குமார் சாகா 2017 ஆம் ஆண்டில் பஜாஜ் ஃபைனான்ஸில் சேர்ந்தார். இவர் நிதித்துறையில் சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர். இவரது 25 ஆண்டு நிதி சேவை துறை அனுபவத்தில், 14 ஆண்டுகள் ஐசிஐசிஐ வங்கியிலும் மற்றும் 11 ஆண்டுகள் நான்கு வங்கி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ICICI வங்கியில் மூத்த பொது மேலாளராக (Senior General Manager) பணியாற்றிய அனுப், ஐசிஐசிஐ வங்கி HFC மற்றும் TU CIBIL ஆகியவற்றின் நிர்வாக குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
அனுப் குமார் சாகாவின் பதவி விலகல் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டிருந்தாலும், 2017 முதல் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய பங்களிப்பு மிகவும் மதிப்பு மிக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications