டெல்லி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 36% வீழ்ச்சி கண்டு, 964.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிபுணர்கள் இதனை 1,037 கோடி ரூபாயாக கணித்திருந்த நிலையில் லாபம் குறைந்துள்ளது. .
பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகரலாபம் 1,506.29 கோடி ரூபாயாக கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி அல்லாத இந்த நிதி நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகரித்து, 4,165 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிபுணர்கள் இந்த வட்டி வருவாயினை 4,149 கோடி ரூபாயாக கணித்திருந்தனர்.

மேலாண்மையின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த சொத்துக்கள் (assets under management) கடந்த ஆண்டை காட்டிலும், 1.15 சதவீதம் குறைந்து, 1.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனாஸ் நிறுவனம் இந்த காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், அதன் பங்கு விலையானது 0.89% வீழ்ச்சி கண்டு, 3,233 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதே போல பஜாஜ் பைனான்ஸின் செயல்படாத சொத்து மதிப்பு (வாராக்கடன்) 1.03 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1.61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகர வாரக்கடன் விகிதம் கூட 0.37 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 0.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் இழப்பு மற்றும் புரவீசன்ஸ் மதிப்பு, இரண்டாவது காலாண்டில் 1,700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 594 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் பரவி வரும் இந்த பெருந்தொற்றின் காரணமாக இந்த நிறுவனம் லாபத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் வாராக்கடன் விகிதமானது குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியே. ஏனெனில் ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ வாரக்கடன் அதிகரித்து வருவதாக தொடர்ந்து காட்டுகிறது என்றால், அந்த நிறுவனம் பின்னடை சந்தித்து கொண்டுள்ளதாக கூறலாம். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் வாராக்கடன் விகிதம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியே. இது வளர்ச்சிக்கான நல்ல பார்வையே.


Click it and Unblock the Notifications