பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் ஜூலை 21 அன்று அதன் முதல் காலாண்டு அறிக்கையினை அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் லாபம் 44 சதவீதம் அதிகரித்து, 1,215 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது அதன் லாபம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த மொத்த வருவாயானது 14,192 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகமாகும். இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது வருமானம் அடிப்படையில் 7 சதவீதம் குறைந்துள்ளது.

எப்படி இருப்பினும் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், அதாவது வரி, வட்டிக்கு பிந்தைய லாபம் 19 சதவீதம் குறைந்து, 962 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயானது 14 சதவீதம் அதிகரித்து 6,650 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே வாரக்கடன்கள் வழக்கம் போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, பஜாஜ் பைனாண்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 1,38,055 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே அதன் துணை நிறுவனமான வீட்டு நிதி நிறுவனம், பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 52 சதவீத வளர்ச்சியினைக் கொண்ட ஒரு நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மதிப்பு 32,982 கோடி ரூபாயாகும். பஜாஜ் குழுமத்தின் கீழ் பல்வேறு நிதிச் சேவை வணிகங்களை வைத்திருக்கும் நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் ஆகும்.
இதே இந்த நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் விகிதம் மற்றும் நிகர வாரக்கடன் விகிதமானது முறையே 1.40% மற்றும் 0.50% ஆகவும் உள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் முறையே 1.60% மற்றும் 0.64% ஆகவும் இருந்துள்ளது. மேலும் இந்த முதல் காலாண்டில் புதிய கடன் விகிதமானது 76% குறைந்து, 1.75 மில்லியனாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆணடு இதே காலாண்டில் 7.27 மில்லியனாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும், ராகுல் பஜாஜ் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், இவருக்கு பின்பு இவரது மகன் சஞ்சீவ் பஜாஜ் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications