சஞ்சீவ் பஜாஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மும்பையின் மகாலக்ஷ்மி பகுதியில் கடல் பார்த்து இருக்கும் 5 அதி சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளனர்.
தெற்கு மும்பையில் உள்ள ரஹேஜா விவாரியா குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சஞ்சீவ் பஜாஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 104 கோடி ரூபாய்க்கும் 5 ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாகவே இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் நாட்டின் முக்கியத் தொழிலதிபர் குடும்பம் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர்.
மும்பை மகாலக்ஷ்மி பகுதி
சஞ்சீவ் பஜாஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஃபாலி பஜாஜ், சஞ்சலி பஜாஜ் மற்றும் மணீஷ் கெஜ்ரிவால் ஆகியோர் மும்பையின் மகாலக்ஷ்மி பகுதியில் கடல் பார்த்து இருக்கும் 5 அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இந்த 5 வீடுகளின் மொத்த மதிப்பு 104 கோடி ரூபாய்.
5 ஆடம்பர வீடு
மேலும் இந்த ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு நிர்வான் குடும்ப அறக்கட்டளை மூலம் வாங்கப்பட்டன, மேலும் மூன்று அப்பார்ட்மென்ட் வீடுகள் ஷெஃபாலி பஜாஜ், சஞ்சலி பஜாஜ் மற்றும் மணீஷ் கெஜ்ரிவால் ஆகியோரால் வாங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சீவ் பஜாஜ் குடும்பம்
இதில் ஷெஃபாலி பஜாஜ் என்பவர், பஜாஜ் ஃபின்சர்வ் எம்டி & சிஇஓ சஞ்சீவ் பஜாஜின் மனைவி ஆவார். மேலும் ஷெபாலி மற்றும் சஞ்சீவ் பஜாஜ் மகள் சஞ்சலி. இவர் சஞ்சலி, மணீஷ் என்பவரை மணந்தார், மணீஷ் கெஜ்ரிவால் கேதாரா கேபிட்டல் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதன் மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் எம்டி & சிஇஓ சஞ்சீவ் பஜாஜ் குடும்பம் தான் இந்த 5 ஆடம்பர வீடுகளையும் வாங்கியுள்ளது.
மும்பை
மும்பையின் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் டெவலப்பர் K Raheja Corp இன் துணை நிறுவனமான Genext Hardware & Parks மற்றும் அதன் கூட்டாளியான Capricorn Realty ஆகிய நிறுவனத்திடம் இருந்து சஞ்சீவ் பஜாஜ் குடும்பம் இந்த 5 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாங்கியுள்ளனர்.
முத்திரை தாள் கட்டணம்
ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க ஷெஃபாலி பஜாஜ், சஞ்சலி பஜாஜ் மற்றும் மணீஷ் கெஜ்ரிவால் ஆகியோர் பத்திர பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணமாகச் சுமார் 6.21 கோடி ரூபாயை செலுத்தியுள்ளனர்.
Raheja Vivarea குடியிருப்பு
அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மும்பை மகாலக்ஷ்மி பகுதியில் இருக்கும் Raheja Vivarea குடியிருப்பு நகரத்தின் E கோபுரத்தில் உள்ளது. ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மிகவும் விலை உயர்ந்தது ஷெஃபாலி வாங்கியுள்ள வீடு தான் இதன் மதிப்பு 28.27 கோடி ரூபாய்.
3,400 சதுர அடி பரப்பளவு
ஷெஃபாலி பஜாஜ் வாங்கியுள்ள வீடு இக்கட்டிடத்தின் 39 வது மாடியில் அமைந்துள்ள 3,400 சதுர அடி பரப்பளவு கொண்டது. மகள் சஞ்சலியின் அபார்ட்மென்ட், 38வது மாடியில் அமைந்துள்ள 3,400 சதுர அடி பரப்பளவு உடன் ரூ.28.27 கோடிக்கு வாங்கப்பட்டது.
மணீஷ் கெஜ்ரிவால்
சஞ்சீவ் பஜாஜ்-ன் மருமகன் மணீஷ் கெஜ்ரிவால் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, 36வது மாடியில் 2,433 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் விலை 15.47 கோடி ரூபாயாகும். மேலும் நிர்வான் குடும்ப அறக்கட்டளை வாங்கிய 2 வீட்டின் விலை 15.84 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications