சென்னை: தனிநபர் கடன் பெறுவது என்பது பல்வேறு தலைவலிகளை கொண்டது. இருப்பினும் வசதியான முறையில் இஎம்ஐ செலுத்தும் வகையில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் லோன்களை வழங்குகிறது.
தனிநபர் கடன்களில் மிக முக்கியமானது வட்டி விகிதம்தான். எனவே கடன் வாங்கும் போது சமாளிக்க முடியும் அளவுக்கான வட்டியை உறுதி செய்வது முக்கியம். இப்படியான வட்டி விகிதங்களை பெற சில உதவி குறிப்புகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

திருமணச் செலவுகள் முதல் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் என பல்வேறு தேவைகளுக்காக கடன்கள் பெறப்படுகின்றன. தேவைப்படும் தொகையை வழங்குதல், அதை உடனடியாக வழங்குதல், சமாளிக்க கூடிய அளவிலான வட்டி மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் ஆகியவை தனிநபர் கடன்களில் முக்கியமானது. ஆனால் பல்வேறு நேரங்களில் வட்டி விகிதமே கடன்களை பெற முடியாத அளவுக்கு இருந்துவிடுகிறது.
கிரெடிட் ஸ்கோர்: இதிலிருந்து தப்பிக்க 5 வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. முதல் விஷயம் கிரெடிட் ஸ்கோர். கிரெடிட் ஸ்கோரை சரியாக மெயின்டெயின் செய்வதன் மூலம் உடனடியான, குறைந்த வட்டி மற்றும் தேவைப்படும் அளவிலான கடனை பெற முடியும். கடன் வழங்குபவர்கள் உங்களை பற்றி சரிபார்க்க வேண்டியிருக்கும். இது நீண்ட நெடிய ப்ராசஸ். ஆனால், நல்ல கிரெடிட் ஸ்கோரை கொண்டிருப்பவர்களுக்கான சரிபார்ப்பு உடனடியாக முடிந்துவிடும்.
கிரெடிட் ஸ்கோர் மெயின்டெயின் செய்தல்: கிரெடிட் ஸ்கோரை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். உதாரணமாக 685 என்பது குறைந்தபட்ச நல்ல கிரெடிட் ஸ்கோர். இதற்கும் குறையாமல் கிரெடிட் ஸ்கோரை மெயின்டெயின் செய்வதன் மூலம் நம்பிக்கையான நபர்களிடமிருந்து கடனை பெறமுடியும். அதேபோல வட்டி விகிதமும் எதிர்பார்த்த அளவில் இருக்கும்.
நிலையான வேலை: ஒரு சரியான மற்றும் நிலையான வேலை இருக்கும் பட்சத்தில் கடன்களை பெறுவது என்பது எளிதானது. குறைந்தது ஒரு வருடம் குறிப்பிட்ட நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வது என்பது கடன் வழங்குபவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். அதேபோல வட்டி விகிதமும் நமக்கு ஏற்றார்போல இருப்பதற்கு இந்த வேலை உறுதி செய்யும்.
வருமான ஆதாரங்கள்: அனைத்து வருமான ஆதாரங்களையும் கடன் வாங்கும் இடத்தில் சமர்ப்பிப்பது என்பது கடன் வழங்களை எளிதாக்கும். வருமான ஆதாரங்கள்தான் நீங்கள் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான நம்பிக்கை சீட்டுகள். மட்டுமல்லாது உங்கள் வருமான ஆதாரங்கள்தான் உங்கள் தகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
சலுகைகளை ஒப்பிடுதல்: கடன் பெறுவது என்று முடிவு செய்துவிட்டால் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் உள்ள மாறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு கடன் வழங்குநர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இந்த ஒப்பீட்டு செயல்முறைக்கு ஆன்லைன் தனிநபர் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். கடன் தொகை மற்றும் தவணை காலம் ஆகியவற்றின் அடிப்படையில் EMI கணக்கிடப்படுகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் போன்ற கடன் வழங்குபவர்கள் தனிநபர் கடனாக ரூ.40 லட்சம் வரை வழங்குகிறார்கள். அதுவும் ஒப்புதல் கிடைத்த 24 மணி நேரத்தில் வழங்குகிறார்கள். பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் லோன் அம்சம் கடனை திருப்பி செலுத்துவதை எளிதாக கொண்டிருக்கிறது. நிதித் திட்டமிடலுக்கு, குறிப்பாக கடனைப் பெறுவதற்கு முன், தகவலறிந்த முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications