தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 54% அதிகரித்து, 4118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2677 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது, வட்டி வருவாய் மற்றும் வட்டி செலவினத்துக்கு இடையேயான விகிதம், கடந்த ஆண்டினை காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து, 8819 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடன் வளர்ச்சி
இதே இதன் கடன் வளர்ச்சியானது 15% அதிகரித்தும், இதே டெபாசிட் விகிதம் 19% அதிகரித்துள்ளது. குறிப்பாக சில்லறை வர்த்தக கடன் 21% அதிகரித்து, கார்ப்பரேட் கடன் விகிதமானது 4% அதிகரித்தும் காணப்படுகின்றது.
இதே புரவிசன் விகிதம் 54.4 சதவீதம் குறைந்து, 987.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வாரக்கடன்
நான்காவது காலாண்டில் இதன் கடன் செலவு 0.32 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டினை காட்டிலும் 116 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. இதே கடந்த காலாண்டில் 12 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் விகிதமானது 3.49% ஆக உள்ளது. இந்த காலாண்டில் குறிப்பிட்ட கடன் இழப்பு 602 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 790 கோடி ரூபாயாக இருந்தது.
பஜாஜ் பின்செர்வ் லாபம்?
இதேபோல பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இது மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 37.48 சதவீதம் அதிகரித்து, 1346 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 979 கோடி ரூபாயாக இருந்தது.
பஜாஜ் பின்செர்வ் -வருவாய்
பஜாஜ் பின்செர்வின் நிகர வருவாய் விகிதமானது 22.58% அதிகரித்து, 18,862 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15,387 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் இந்த நிறுவனம் டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 4 ரூபாய் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்த 48 கோடி ரூபாயில் இருந்து, இன்று 64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்?
ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையானது பி.எஸ்.இ-யில் 1.81% அதிகரித்து, 779.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 866.60 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 637 ரூபாயாகவும் உள்ளது.
இதே பஜாஜ் பின்செர்வ் பங்கின் விலையானது பி.எஸ்.இ-யில் 1.25% அதிகரித்து, 15,011.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 19,325 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 10,151.15 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications