சியா என்டரி.. பஜாஜ் குழுமத்தின் புதிய பிஸ்னஸை பாத்தீங்களா..!

இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் பஜாஜ் குரூப் தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு புதிய வர்த்தக துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

பஜாஜ் குரூப் ஆட்டோமொபைல் துறையை தாண்டி பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், பஜாஜ் இந்டெப், முகுந்த் லிமிடெட், பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், பஜாஜ் எனர்ஜி, பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் என பல துறையில் தனது வர்த்தகத்தை இயக்கி வரும் வேளையில் புதிதாக ஹெல்த்கேர் பிரிவில் இறங்க முடிவு செய்துள்ளது.

சியா என்டரி.. பஜாஜ் குழுமத்தின் புதிய பிஸ்னஸை பாத்தீங்களா..!

இந்தியா முழுவதும் நிவாரா என்ற பெயரின் கீழ் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பல பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களான டாடா, ரிலையன்ஸ், மணிப்பால் போன்றவை இருக்கும் வேளையில் தற்போது பஜாஜ் குழுமமும் இறங்கியுள்ளது.

பஜாஜ் குரூப் போன்ற பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் ஒரு துறைக்குள் புதிதாக வரும்போது பெரியளவிலான தொகையை முதலீடாகக் கொண்டு வரும்.

இப்படி கொண்டு வரும் முதலீட்டை வைத்து ஒவ்வொரு செங்கல் செங்கல்லாகக் கட்டுவதை தவிர்த்து இந்த முதலீட்டை பெரும்பாலும் பிரபலமாக இருக்கும் மருத்துவமனை பிராண்டுகளை வாங்குவது மூலம் வேகமாக விரிவாக்கம் செய்யும். அந்த வகையில் ஹெல்த்கேர் பிரிவில் புதிதாக ஒரு கன்சாலிடேஷன் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முதல் படியாக புனேயில் 500 படுக்கைகளை கொண்ட மெகா மருத்துவமனையைக் கட்ட முடிவு செய்துள்ளது, இந்த மருத்துவமனை 2030க்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது பஜாஜ். இதை பஜாஜ் இன்டிகிரேடெட் ஹெல்த் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவரான நீரவ் பஜாஜ் உறுதி செய்துள்ளார்.

மேலும் பஜாஜ் குழுமம் புனேயில் மருத்துவமனை மட்டும் அல்லாமல் 6- 7 கிளீனிக் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்கள், டே கேர் சென்டர்களையும் திறக்க முடிவு செய்துள்ளது.

நீவாரா பிராண்டின் கீழ் புனேவில் திட்டமிடப்பட்டு உள்ள பணிகளுக்காக மட்டும் 2500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது, இதேபோல் அடுத்த 15 வருடத்தில் 10 நகரங்களுக்கு நீவாரா பிராண்டை கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது.

இதற்காக 10000 கோடிக்கும் அதிகமான தொகையை பஜாஜ் குழுமம் திட்டமிட்டு உள்ளது. இந்திய ஹெல்த்கேர் துறையில் தற்போதும் பெரும் பகுதி சந்தையைப் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கும் வேளையில் இந்திய தொழில் சாம்ராஜ்ஜியங்கள் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் அதானி குழுமம் 6000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் 2 பெரிய மருத்துவமனையை லாபமற்ற நோக்கில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+