ராக்கெட் வேகம் கண்ட பஜாஜ் ஹவுசிங்.. பங்குகள் 10% உயர்வு.. டார்கெட் விலை கொடுத்த முதல் தரகு நிறுவனம்!

நேற்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு அபாரமான லிஸ்டிங் ஆதாயங்களைக் கொடுத்த பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், இன்றும் அதே ஏற்றத்தைத் தொடர்ந்து 10 சதவிகிதம் ஏற்றத்துடன் அப்பர் சர்க்யூட்டைத் தொட்டது. பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் சமீபத்திய ஐபிஓவாக வெளியாகி நேற்று பங்குச் சந்தையில் பெரும் லிஸ்டிங் ஆதாயங்களைக் கொடுத்தது. அதன்படி பங்குகள் இன்றும் அதே ஏற்றத்தைக் காட்டுகிறது. நேற்று இந்நிறுவனத்தின் பங்கு 114 சதவீத பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டு அதன் பிறகு ராக்கெட் போல சுழன்று மேல் சர்க்யூட்டை தொட்டு ரூ. 165ல் முடிந்தது.

மேலும் இன்றைய வர்த்தகத்திலும் இந்த பங்கு 10 சதவீதம் உயர்ந்து ரூ.100 என்ற அளவில் உயர்வை தொட்டது. 181.50க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இரண்டே நாட்களில் இந்த பங்குதாரர்களுக்கு 159 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை அளித்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. அதாவது இந்த பங்கு உங்கள் முதலீட்டை விட இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் IPO ஒதுக்கீடு பெற்றவர்கள் தற்போதைய அதிர்ஷ்டசாலிகள்.

ராக்கெட் வேகம் கண்ட பஜாஜ் ஹவுசிங்.. பங்குகள் 10% உயர்வு.. டார்கெட் விலை கொடுத்த முதல் தரகு நிறுவனம்!

இதற்கிடையில், முன்னணி பங்குத் தரகு நிறுவனமான பிலிப் கேபிடல், புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள பஜாஜ் ஹோசிங் ஃபைனான்ஸ் பங்குக்கு இலக்கு விலையுடன் வாங்கும் மதிப்பீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குக்கு ரூ. 210 இலக்கு விலை தருவதாக தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளை தற்போதைய விலையில் வாங்கினால், சுமார் 17 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குதல், செலவின விகிதத்தை நிலையாக வைத்திருத்தல், கடன் செலவினங்களில் கவனம் செலுத்துதல் போன்ற நிறுவனத்தின் முன்முயற்சிகள் குறித்து அவர்கள் நேர்மறையாக இருப்பதாகவும், பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் அதன் சக நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக வருவாய் விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும், இதற்குக் காரணம் 40% அதன் தாய் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸின் வாடிக்கையாளர்கள் என்றும், எனவே இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு தற்போது இந்த இலக்கு விலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தரகு நிறுவனம் கூறியுள்ளது. பஜாஜ் ஹோசிங் ஃபைனான்ஸ் பங்குகளுக்கு இலக்கு விலையை வழங்கிய முதல் தரகு நிறுவனம் பிலிப் கேபிடல் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, மதியம் 1.30 மணியளவில் பஜாஜ் ஹவுசிங் பங்குகள் 9.99% உயர்ந்து பங்குகள் ரூ.181.48 ஆக வர்த்தகமாகி வருகின்றன.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+