புனே: இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளராக இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மூன்றுசக்கர வாகனமான ஆட்டோ விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது இந்நிறுவனம். உலகின் முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை தயாரித்து வருவதாகவும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அண்மையில் இதன் தலைவர் ராஜீவ் பஜாஜ் அறிவித்திருந்தார்.

இதன்படி புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக் ஃபீரிடம் 125 (Freedom 125) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பஜாஜ் ஆட்டோவின் தலைவர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சிஎன்ஜி பைக், இரண்டு எரிபொருள்களிலும் ஓடக் கூடியது. அதாவது சிஎன்ஜி-யிலும் பயன்படுத்தலாம், பெட்ரோலிலும் பயன்படுத்தலாம்.
ஆறு வண்ணங்களில் மற்றும் மூன்று வகைப்பாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இணையதளம் மற்றும் டீலர்ஷிப் மூலமாக இந்த பைக்கிற்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும்போது இந்த பைக்கின் பராமரிப்பு செலவு என்பது 50 சதவிகிதம் குறைவாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
ஃப்ரீடம் 125 பைக்கில் பெட்ரோல் டேங்க் மற்றும் அதற்கு கீழே 2 கிலோ எடை சிஎன்ஜி கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சின்ன பட்டனை அழுத்தினாலே தானாகவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜிக்கு இடையே மாற்றி கொள்ளும்.
ஃப்ரீடம்125 பிராண்டின் கீழ் ட்ரம்(Drum), ட்ரம் எல்இடி(Drum LED) மற்றும் டிஸ்க் எல்இடி (Disc LED) என மூன்று வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் அடிப்படை வகையான டிரம்மின் எக்ஸ் ஷோரூம் விலை 95,000 ரூபாய், ட்ரம் எல்இடி-இன் விலை 1.05 லட்சம் ரூபாய், டிஸ்க் எல்இடி-இன் 1.10 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கை பொறுத்தவரை 125சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயுவுக்கு இந்த பைக்கானது 213 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையின் நீளம் என்பது 785 மில்லி மீட்டர்களாக இருக்கிறது. இது 9.5 PS பவர்( power) மற்றும் 9.7 Nm டார்க்( torque) உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications