84 வருட கூட்டணி உடைகிறது.. பஜாஜ் - ஷா குடும்பங்கள் பிரிவு..!

1937 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட முகந்த் ஐயன் அண்ட் ஸ்டீல் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தை 1939ஆம் ஆண்டு மகாத்மா காந்தி-யின் ஆசீர்வாதத்துடன் ஜமன்லால் பஜாஜ் மற்றும் ஜீவன் லால் ஷா ஆகியோர் இணைந்து வாங்கினர்.

இந்தக் கூட்டணி சுமார் 84 வருடமாகத் தொடர்ந்து வருவது மட்டும் அல்லாமல் பல தலைமுறைகள் தொடர்ந்து இக்கூட்டணியில் இருந்து வரும் நிலையில், தற்போது ஜீவன் லால் ஷா குடும்பம் மொத்தமாக முகந்த் லிமிடெட் நிறுவனத்தில் முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பஜாஜ் குடும்பம் முகந்த் லிமிடெட் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது

 முகந்த் லிமிடெட்

முகந்த் லிமிடெட்

84 வருடமாக இயங்கி வரும் முகந்த் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஷா குடும்பத்தின் உறுப்பினர்களான சுகேத்து, ராஜேஷ் சகோதரர்கள் வெளியேற முடிவு செய்துள்ள காரணத்தால், பல மாதங்களாகச் செய்யப்பட்டு வரும் ஆலோசனையில் ஷா குடும்பத்தின் கட்டுப்பாடிட்டி இருக்கும் 16.5 சதவீத பங்குகளைப் பஜாஜ் குடும்பம் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

 கடைசி 16.5 சதவீத பங்குகள் விற்பனை

கடைசி 16.5 சதவீத பங்குகள் விற்பனை

முகந்த் லிமிடெட் நிறுவனத்தில் பல மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளைச் செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தில் இருந்து ஷா குடும்பச் சகோதரர்கள் வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 16.5 சதவீத பங்குகளை முகந்த் லிமிடெட் நிறுவனத்தின் மற்றொரு ப்ரோமோட்டர் கைப்பற்றும் காரணத்தால் பிளாக் டீல் வாயிலாக வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 353 கோடி ரூபாய்க்கு விற்பனை

353 கோடி ரூபாய்க்கு விற்பனை

சுகேத்து, ராஜேஷ் சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் 16.5 சதவீத பங்குகளை 353 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பஜாஜ் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் கைப்பற்ற உள்ளது. இதன் முகந்த் லிமிடெட் நிறுவனத்தின் 74.35 சதவீத பங்குகள் ப்ரோமோட்டர் பங்குகளாக உள்ளது. மீதமுள்ள பங்குகள் ரீடைல் சந்தையில் உள்ளது.

 பஜாஜ் குடும்பம் மற்றும் நிறுவனம்

பஜாஜ் குடும்பம் மற்றும் நிறுவனம்

முகந்த் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் பஜாஜ் ஹோல்டிங்கஸ், பஜாஜ் தேவாஷ்ரம், நீரஜ், மதுர், சேகர் மற்றும் அடுத்த தலைமுறை தலைவர்களான ராஜீவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் கையில் மட்டும் சுமார் 58 சதவீத பங்குகள் வைத்துள்ளனர்.

 கடன் அளவு

கடன் அளவு

2,142 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் முகந்த் லிமிடெட் சில தவறான வர்த்தக முடிவின் காரணமாக இந்நிறுவனத்தின் கடன் அளவு கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 3,100 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. கடன் சுமையைக் குறைக்க மகாராஷ்டிராவில் இருக்கும் சில முக்கியமான சொத்துக்களைச் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து கடன் அளவை பாதியாகக் குறைத்தது.

 ரோலிங் ஸ்டீல் தயாரிப்பு

ரோலிங் ஸ்டீல் தயாரிப்பு

முகந்த் லிமிடெட் நிறுவனம் ஸ்டீல் மற்றும் ரோலிங் ஸ்டீல் பொருட்களைத் தயாரித்து வருகிறது. வருடத்திற்கு 5,00,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்நிறுவனம் 400 கிரேடுகளில் ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் தயாரிக்கிறது.

 உற்பத்தி.. வர்த்தகம்.. ஏற்றுமதி..

உற்பத்தி.. வர்த்தகம்.. ஏற்றுமதி..

முகந்த் லிமிடெட் நிறுவனம் தானே, மகாராஷ்டிரா, ஹோஸ்பேட் ஆகிய பகுதிகளில் உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் பல ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஸ்டீல் சப்ளை செய்கிறது. இதுமட்டும் அல்லாமல் ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் சில கரீபியன் நாடுகளும் ஸ்டீல் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+