பொதுவாக ஆடம்பர பிராண்டுகள் பலவும் தங்களின் வாடிக்கையாளார்களை கவர, வடிவமைப்புகளை வித்தியாசமான வடிவமைப்பார்கள். பல வித்தியாசமான படைப்புகளையும் நாம் அதில் பார்க்க முடியும். அதில் சமீபத்தில் பிரபலமான ஆடம்பர பிரண்டான லூயிஸ் உயிட்டன் பெயிண்ட் டப்பா வடிவில் ஒரு பேக்கினை வெளியிட்டிருந்தது.
இதுபோன்ற ஆடம்பர பிராண்டுகள் வாடிக்கையாளார்களை கவருவதற்காக உருவாக்கினாலும், இது பார்ப்போரை திகைக்க வைக்கும் விதமாக உள்ளது.
பலென்சியாகா
பலென்சியாகா என்ற ஆடம்பர பிராண்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு குப்பை பையினை வெளியிட்டது. இதன் விலை 1790 டாலர்களாகும். இதன் இந்திய மதிப்பு சுமார் 1,42,569 ரூபாயாகும். இதுவே பலரின் மத்தியில் ஒரு திகைப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஷீ லேஸ் போன்ற காதணியினை வெளியிட்டுள்ளது.
வித்தியாசமான காதணி
இதுவே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது எனில், இதன் விலை இன்னும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த காதணியில் ஒரு கொக்கி, அதில் ஷீ லேஸ்கள் தான் தொங்குகின்றன. இதன் விலை 216 டாலராகும். இதன் இந்திய மதிப்பு சுமார் 17,232 ரூபாயாகும்.
மற்ற பிராண்டுகள்
பொதுவாகவே பலென்சியாகாவின் பிராண்டுகள் பலவும் இப்படி வித்தியாசமான வடிவமைப்பிலேயே இருக்கும். அதன் குப்பை பை, 1790 டாலரிலும், அதன் பாரிஸ் ஸ்னீக்கர் 1850 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அப்படியிருக்கும்பட்சத்தில் இந்த ஷீ லேஸ் தோடுகள் இன்னும் ஒரு படி மேலாக உள்ளது.
இன்ஸ்டா பதிவு
ஹைஸ்னோபிட்டி (highsnobiety) என்ற இன்ஸ்டா பதிவில் ஃபேஷனை பற்றி எழுதும்போது சில விஷயங்களை சீரியஸாக எடுத்துகொள்வது கேலிக்குரியதாக இருப்பதை காண்கிறோம். உதாரணத்திற்கு பிராடாவி ன் வெள்ளை டேங்க் டப்பாவினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் விலை 1000 டாலர்கள். தற்போது பலென்சியாகாவின் ஷீ லேஸ் போன்ற காதணிகள் 261 டாலர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்டா பயனர்கள் கமாண்ட்
இது குறித்து இன்ஸ்டா பதிவுக்கு பயனர்கள் தங்களது கமாண்ட் மழையை பொழிந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் இது போன்ற முட்டாள் தனத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.
மற்றொரு பயனர் இது உண்மையான பேஷன் தான். ஆனால் யார் இதனை வாங்குவார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். பல ஆயிரம் இதனை லைக் செய்துள்ள நிலலையில், பலரும் கமாண்டுகளையும் போட்டு வருகின்றனர்.
நீங்க என்ன சொல்றீங்க? உங்க கமாண்ட்டினையும் பதிவிடுங்க.


Click it and Unblock the Notifications