இந்திய ரயில்வே துறையில் பாதுக்காப்பு பணிகளும், தொழில்நுட்ப உதவிகளும் அதிகளவில் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளதால் விபத்துகள் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் குறைந்திருந்தாலும், ஓடிஷாவில் கோரமண்டல் - யஸ்வந்த்பூர்- சரக்கு ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரயில் எண் 12841 கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதியது. கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் ரயில் பஹானாகா பஜார் நிலையம் அருகே மாலை 7:20 மணி அளவில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 15 பெட்டிகள் தடம் புரண்டன. சுமார் 350 பேர் காயமடைந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் ரயில் எண் 12864 யஸ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஹவுரா நோக்கி பயணித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி, அதன் சொந்த பெட்டிகள் சில தடம் புரண்டது. இதன் மூலம் இந்த விபத்தில் மொத்தம் மூன்று ரயில்கள் சிக்கின.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், B2, B3, B4, B5, B6, B7, B8. B9 பெடிக்கள் தடம் புரண்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் இந்த ஓடிஷா ரயில் விபத்துடன் சேர்த்து மொத்தம் 4 விபத்துகள் நடந்துள்ளது.

2 ஜனவரி 2023ல் சூர்யநாக்ரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் மார்வார் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3:27 மணிக்குப் புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் தடம் புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர், யாரும் உயிரிழக்கவில்லை.
3 ஏப்ரல் 2023ல் எலத்தூர், கோழிக்கோடு, கண்ணூர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்ததால் எட்டு பயணிகள் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் ரயில் பாதையில் இறந்து கிடந்தனர்.
15 மே 2023ல் பெங்களூரு நோக்கிச் சென்ற சென்னை - பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி காலை 11:30 மணியளவில் பிஸ்நத்தம் நிலையம் அருகே தடம் புரண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்களும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications