பெலன்சியாகா (Balenciaga) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு ஷூ தான் சமூக வலைத்தளங்களில் பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக மாறி உள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த ஆடம்பர ஃபேஷன் நிறுவனமான பெலன்சியாகா அவ்வப்போது தனித்துவமான ஆடைகள் மற்றும் ஷூக்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து அனைவரையும் வியப்படையை வைக்கும். அந்த வகையில் பெலன்சியாகா நிறுவனம் தற்போது ஃபேஷன் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் படியான ஒரு பொருளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தங்களுடைய புதிய ஷூக்களின் டிசைன்களை வெளியிட்டுள்ளது. இதில் ஜீரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒரு ஷூ தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

டெம்னா வசாலியா என்ற பிராண்ட் டைரக்டர் -இன் கீழ் இந்த கிரியேட்டிவான ஷூவானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து விரல்களில் பெருவிரல் மட்டுமே கவராகிறது, மற்ற விரல்கள் அனைத்தும் வெளியில் தெரியும். அதாவது ஒரு ஸ்லிப்பானை போலவோ ஒரு ஷூவை போலவோ கலந்த கலவையாக இந்த ஜீரோ ஷூவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் ஃபோமை(foam) கொண்டு தான் இந்த ஜீரோ ஷூ தயார் செய்யப்பட்டுள்ளதாம்.
நமது கால் முழுவதுமே வெளியில் தெரியும் அளவுக்கு இது தயாரிக்கப்பட்டுள்ளது.இதனை சாண்டல், ஸ்லைடு அல்லது ஷூ என மூன்றில் எந்த பெயரை வேண்டுமானாலும் கொண்டு அழைக்கலாம் என பெலன்சியாகா நிறுவனம் கூறுகின்றது. இதனை மினிமலிஸ்ட் டிசைன் என இந்த நிறுவனம் அழைக்கிறது . இதனை அணிபவர்களுக்கு அவர்களின் பெருவிரலும் , குதிகால் பகுதியும் மட்டுமே மறைக்கப்பட்டு இருக்கும். காலின் மற்ற பகுதிகள் அனைத்தும் வெளியில் தெரியும். இதனை சாக்ஸுடன் அணிந்து கொள்ளலாம் என பெலன்சியாகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை ஜீரோ பேர் ஃபுட் ஷூ (ZERO barefoot shoe) என்றும் இந்த நிறுவனம் அழைக்கிறது. இப்படி தான் சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனம் ஒரு துண்டை ஸ்கர்ட் ஆக மாற்றி அது ஒரு ஃபேஷன் என விற்பனை செய்தது. அதன் வடிவமைப்புக்கு பின்னர் இருந்தவர் இந்த டெமுனா, அதே போல குப்பை பையை ஒரு ஹேண்ட் பேக்காக மாற்றி பல லட்சங்களில் விற்பனை செய்தவரும் இவரே.
இவர் தான் இந்த புதிய ஷோவையும் வடிவமைப்பு செய்திருக்கிறார். இந்த ஷூவினை பெலன்சியாகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. பலரும் பெலன்சியாகாவின் இந்த ஷூ குறித்து சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ஷூவின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை . இது கருப்பு ,வெள்ளை மற்றும் அடர்ந்த பழுப்பு நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது .
Written by: Devika


Click it and Unblock the Notifications