ராணுவ கேண்டீன்-களில் 'இந்த' பொருட்களுக்கு தடை.. மத்திய அரசு சொல்லும் காரணத்தை பார்த்தீங்களா..?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மானிய விலையில் பொருட்களை விற்கும் ராணுவ கேண்டீன்களில் (கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் - CSD) இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது "மேக் இன் இந்தியா" திட்டத்தில் பல நல்ல மாற்றங்களைச் செய்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவில் தயாரித்து வருகின்றன.

"ஆத்மநிர்பர் பாரத் அபியான்” என்ற தன்னம்பிக்கை இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான உத்தரவு வந்ததற்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள CSD விற்பனை நிலையங்களில் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட 431 பொருட்களின் விற்பனை அக்டோபர் 2020-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

ராணுவ கேண்டீன்-களில் 'இந்த'  பொருட்களுக்கு தடை.. மத்திய அரசு சொல்லும் காரணத்தை பார்த்தீங்களா..?

இதனால் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியமைத்தன. இதன் விளைவாக, தடை செய்யப்பட்ட 421 பொருட்களில் 255 பொருட்கள் CSD-யில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன என்று விஷயம் தெரிந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கார்கள், இரு சக்கர வாகனங்கள், மதுபானம், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், உணவுப் பொருட்கள், சாமான்கள், கடிகாரங்கள், ஸ்லிப்பர்கள் மற்றும் பிற பொதுப் பொருட்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகள் CSD-இன் அட்டவணையில் அடங்கும். CSD ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்கிறது.

இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்டட் தயாரிப்புகளில் டிவி, பிரிட்ஜ், அழகுசாதனப் பொருட்கள், ஸ்போர்ட்ஸ் ஷூ, சன்கிளாஸ்கள் மற்றும் டேபிள் ஃபேன்கள் ஆகியவை அடங்கும். நாட்டில் உற்பத்தியைத் தொடங்கிய நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கவில்லை.

2020-ஆம் ஆண்டு தடை பல்வேறு துறைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சியாகும். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக, இந்தியா உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இராணுவ கருவிகளை வாங்குவதற்கு தனி சட்டம் அமைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) 49% முதல் 74% வரை அதிகரித்துள்ளது மற்றும் வணிகம் செய்வதற்கான செயல்முறையை மேம்படுத்தியுள்ளது.

இராணுவம் படைகளுக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தர ரேஷன் பொருட்களை வழங்குதல், தொழில்நுட்பத்தை ராணுவத்தோடு இணைத்தல் மற்றும் தயார் நிலையில் இருப்பதற்கு தேவைப்படும் அதிகாரிகளை நியமித்தல் போன்றவை அடங்கும். இராணுவம் படைகளுக்கு வழங்கப்படும் ரேஷன்களின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்திய இராணுவம்.. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்துடன் (FSSAI) இணைந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தை உருவாக்குவதன் முயற்சியாக ராணுவம் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனுடன் இணைந்து அதன் சுஷுல் காரிஸன் மற்றும் லேயில் உள்ள பேருந்துகளுக்கு மின்சாரம் வழங்க பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+