இந்த ஒரு விஷயத்தால் பெங்களூரில் இனி டிராபிக் பிரச்சனை இருக்காது..!!
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வரும் ஆண்டுகளில் 43 கிமீ நீளமுள்ள பர்பூல் பாதையை - சல்லகட்டாவிலிருந்து வைட்ஃபீல்ட் வரையும், மஞ்சள் பாதை RV சாலையில் இருந்து Bommsandra வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில முக்கியமாக பர்பூல் பாதை அடுத்த சில வாரத்திலேயே அல்லாது சில மாதத்திலேயோ துவங்க உள்ளது முக்கியமான விஷயம்.
இந்த முக்கியமான மெட்ரோல் ரயில் திட்டம் பெங்களூர் போக்குவரத்து துறையை மொத்தமாக மாற்றும் என கணிக்கப்படும் வேளையில் இதுக்குறித்து மக்கள் மத்தியில் முக்கிய ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல ரயில்கள், மெட்ரோ திட்டங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் அறிமுகத்திற்கு பின்பு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைப்பது இல்லை.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வேயில் தற்போது தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் 95 சதவீத பெங்களூர் மக்கள் மெட்ரோவுக்கு மாறத் தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மெட்ரோ வந்த பின்னர் பெங்களூரின் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் டிராபிக் பிரச்சனை களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மெட்ரோ திட்டங்கள் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் காரணத்தால் மக்கள் போக்குவரத்து என்பது மிகவும் எளிதாகும்.
ஆன்லைன் கணக்கெடுப்பில் பங்கேற்ற 3,855 பேரில் சுமார் 60 சதவீதம் பேர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல கார் அல்லது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகின்றனர். இங்கு பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் ஒயிட்ஃபீல்ட், ஓஆர்ஆர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூர் மெட்ரோ சேவை மக்களின் முக்கிய தேவையாக இருந்த முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்து தான். இதை மெட்ரோ மூலம் தீர்க்கப்படுவது மட்டும் அல்லாமல் புதிய நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளை அமைப்பதன் மூலம் மெட்ரோ நிலையங்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் மக்கள் எளிதில் சென்றடையலாம்.
பெங்களூர் நகரின் டிராபிக்-ல் 10 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமெனில் குறைந்தது 60 நிமிடமாகும். இந்த நிலையில் அலுவலக வாகனங்களை நம்பியிருக்கும் ஊழியர்கள் கூடுதலான நேரத்தை செலவிட வேண்டிய நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications