நாதஸ்.. பழம் வாங்கிட்டு வா.. ஒரு பழம் என்ன விலை தெரியுமா.. அடேங்கப்பா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம்: சேலத்தில் வாழைப்பழம் திடீரென விலை உயர்ந்து காணப்படுவதால் பழப் பிரியர்கள் அடடா என்று புலம்பிக் கொண்டுள்ளனராம்.

கிடுகிடுவென உயர்ந்த வாழைப்பழத்தின் விலை.. புலம்பும் மக்கள் - வீடியோ
 

பழம் விலை திடீரென உயர முக்கியக் காரணம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவைதான் முக்கியம். இதன் காரணமாக வாழைத்தார் விலை உயர்ந்திருப்பதால், பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

ஆயுத பூஜை பண்டிகை 25ம் தேதியும், சரஸ்வதி பூஜை 26ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா களை கட்டியிருந்தாலும் கூட விழாவைக் கொண்டாட மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

"வெங்காய போண்டா கிடையாது போடா".. விலைவாசி தாறுமாறு.. களத்தில் குதித்த மத்திய அரசு!

வ.உ.சி. மார்க்கெட்

வ.உ.சி. மார்க்கெட்

பூஜைக்கு படைப்பதற்காக பொதுமக்கள் வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி படைப்பது வழக்கம். இந்தநிலையில் சேலம் வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் வாழைப்பழம் அதிக வரத்து காரணமாக வாழைப்பழத்தின் விலை கடுமையாக உயர்வு அடைந்துள்ளது. ஒரு தாரின் விலை 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையில் அதிக அளவிலான வாழைப்பழங்கள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தற்போது வாங்கிச் செல்கின்றனர். தற்போது தார் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் தற்போது செழிப்பாக இருப்பதற்கு ஒரு வசந்த காலமாக இதை தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு
 

விலை உயர்வு

அதேசமயம், பொதுமக்களுக்குத்தான் பழம் விலை உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. வாழைப்பழத்தின் விலை உயர்வால் சற்று கவலை அடைந்து உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு விற்ற ஒரு வாழைப்பழம் தற்போது ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதிக அளவிலான வியாபாரம் ஆவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி

வ.உ.சி மார்க்கெட்டில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்து பூஜைக்கு தேவையான வாழைப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் கூட விற்பனையும் அதிகமாகவே இருக்கிறது. இது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

களை கட்டும் வியாபாரம்

களை கட்டும் வியாபாரம்

கொரோனா காலகட்டத்தில் தங்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய ஒரு இழப்பை சந்தித்தது தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகள் மூலமாக தங்களின் வாழ்வு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மூன்று நாட்கள் வியாபாரத்தின் மூலமாக தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: banana salem சேலம்
English summary

Banana price go high in Salem

Banana fruits price are high in Salem due to the festival season.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X