பந்தன் பேங்கின் மாஸ் ப்ளான்! பெண்களுக்கான புதிய திட்டம்.. ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ஃப்ரீ!

சமீபத்தில் வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் வரத்து குறைந்து வங்கிகளின் கடன் அதிகமானது குறித்த செய்தி வெளியானது. அதிலிருந்து வங்கிகள் டெபாசிட்டை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மாற்றம் செய்துள்ளன. தற்போது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "அவ்னி" என்ற புதிய சேமிப்புக் கணக்கை பந்தன் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் டெபாசிட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் வங்கி இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பதிவில் அவ்னி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அவ்னி சேமிப்புக் கணக்கின் முக்கிய அம்சங்கள்: அவ்னி சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் பெண்களுக்கு டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இலவச விமான நிலைய ஓய்வறையைப் பயன்படுத்தும் வசதி, ரூ.10 லட்சம் தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் மாதத்திற்கு ரூ. 5,00,000 என்ற இலவச டெபாசிட் வரம்பை பெறலாம். மாதத்திற்கு 10 இலவச RTGS-NEFT பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம்.

 பந்தன் பேங்கின் மாஸ் ப்ளான்! பெண்களுக்கான புதிய திட்டம்.. ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ஃப்ரீ!

அதுமட்டுமின்றி நெட் பேங்கிங் மற்றும் mBandhan செயலி மூலம் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற இலவச NEFT பரிவர்த்தனைகளைப் பெற முடியும். கூடுதலாக, பெண் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 40 இலவச செக் லீஃப்களை பெறலாம். மேலும் ஒரு பாஸ்புக், மெயில் ஸ்டேட்மென்ட் மற்றும் SMS அறிவிப்புகளைப் பெறுகின்றனர். அனால் இந்த சேமிப்புக் கணக்கில் சராசரியாக காலாண்டு பேலன்ஸ் ரூ.25,000-ஐ பராமரிக்க வேண்டும்.

முன்னுரிமை: "அவ்னி" கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பலவிதமான சேவைகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் லாக்கர் வாடகைக் கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடியும், தங்கக் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் அடங்கும்.

பிராண்டுகளில் சலுகைகள்: அவ்னி சேமிப்புக் கணக்கு பல்வேறு பிராண்டுகளில் பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் லைட் அப் பியூட்டி பிராண்டில் எந்தப் பொருளை வாங்கினாலும் 50 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும் மற்றும் MyGlamm-இலிருந்து ரூ.1,299 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கினால் ரூ.500 தள்ளுபடியைப் பெறலாம்.

சுகாதாரம் மற்றும் நலனுக்காக, அவ்னி கணக்குதாரர்கள் M-Swasth மூலம் சுகாதார சேவைகளை குறைந்த விலையில் பெற முடியும்.

டெலிகன்சல்டேஷன் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ. 365 ரூபாய். டெலிகன்சல்டேஷன் + யோகா மற்றும் முழு உடல் பரிசோதனை தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ. 790 ரூபாய்.

பெண் வைப்பாளர்களை அதிகரிக்கும் நோக்கில் பந்தன் பேங்க் கொண்டு வந்துள்ள இந்த திட்டம் எவ்வளவு சிறப்பாக செயல்பட உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+